த்திய மோடி அரசின் வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து நேற்று (05-11-2020) சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு தமிழகத்தில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

நாடாளுமன்றத்தில், 3 விவசாயிகள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டத் திருத்தங்களை நிறைவேற்றியதைக் கண்டித்து நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் கடுமையான போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலைஇல் அனைத்திந்தைய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் கீழ் நாடுமுழுவதும் உள்ள விவசாய அமைப்புகள் ஒன்று கூடி நவமர்ப் 5-ம் தேதி நாடு தழுவிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தன.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் விவசாய சங்கங்கள் தமிழகமெங்கும் நடத்திய சாலை மறியல் போராட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். சென்னை, கோவை, காஞ்சிபுரம், தருமபுரி, விருதாச்சலம், கடலூர், பாண்டிச்சேரி ஆகிய மண்டலங்களில் உள்ள தோழர்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

சென்னை :

பாண்டிச்சேரி :

காஞ்சிபுரம் :

தருமபுரி :

கோவை :

விருதாச்சலம் :

கடலூர்:

தகவல் :
மக்கள் அதிகாரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க