டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம், வேளாண் சட்ட  திருத்தத்தை முறியடிப்போம் என்ற முழகத்தின் கீழ் தமிழ்நாடு விவசாய சங்கம், மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் இன்று (2.12.2020 ) காலை 11 மணியளவில் தருமபுரி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைப்பெற்றது.

முற்றுகைப் போராட்டம் நடத்த கூடாது என தருமபுரி போலீசு ஆய்வாளர் ரத்தினகுமார் அடாவடியாகப் பேசினார். இதனை எதிர்கொண்டு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தேறியது. இதில் தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்டத் தலைவர் தோழர்.அர்ஜுனன் அவர்கள் தலைமை தாங்கினார்.

படிக்க :
♦ டெல்லி பேரணி : முடக்கத் துடிக்கும் போலீசு ! அடங்க மறுக்கும் விவசாயிகள் !!
♦ விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை !

மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் தலைமையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்தும் விதமாக போலீசுபடையை அதிக எண்ணிக்கையில் குவித்து வைத்தது போலீசு. ஆர்ப்பாட்டத்தை மக்கள் கவனிக்க கூடாது என்ற வகையில் தடுப்பரண் போட்டு தடுத்து வைத்தனர். அதனையும் மீறி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

படங்கள் :

தகவல்
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்
தொடர்பு : 97901 38614

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க