“டெல்லியில் தீரத்துடன் போராடும் விவசாயிகளின் டிசம்பர் 14 நாடு தழுவிய அளவில் BJP அலுவலகங்களை முற்றுகையிடுவோம் !!
அம்பானி அதானிகளின் jio மற்றும் சேவைகளை புறக்கணிப்போம் !!”
என்கின்ற முழக்கத்துடன் உசிலம்பட்டியில் உள்ள Jio அலுவலகம் முன்பு பல்வேறு ஜனநாயக, புரட்சிகர அமைப்புகள் இணைந்து பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் CPI, CPM, வி.சி.க. மற்றும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தின் முன்பு, அகில இந்திய விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்பு குழுவால் நடத்தப்பட்ட காத்திருப்பு போராட்டத்திலும் மக்கள் அதிகாரம் மற்றும் அனைத்து ஜனநாயக சக்திகளும் விவசாய பெருமக்களும் கலந்துகொண்டனர்.
படிக்க :
♦ இந்திய தேசிய ஜோதியில் தமிழகம் கலக்க மறுப்பதேன்?
♦ நூல் விமர்சனம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த் தெல்தும்டே | எஸ். காமராஜ்
“நாங்கள் விவசாயிகளின் நலனுக்காகத் தான் இந்த சட்டதிருத்த மசோதாவை கொண்டுவந்தோம், ஆனால் விவசாயிகள் இந்த மசோதாவை பற்றிய சரியான புரிதல் இல்லாததால் தான் போராடுகிறார்கள்” என்று அமித்ஷா, மோடி, நிர்மலா சீதாராமன் போன்ற கார்ப்பரேட் காவிக் கும்பல் கூறுகிறது.
இந்த சட்டதிருத்த மசோதா என்பது விவசாயிகளை அடியோடு ஒழித்துக்கட்டுவதற்காகவே கொண்டுவரப்பட்ட விவசாயி விரோத மசோதா என்பதை புரிந்து கொண்ட பஞ்சாப் மாநில சிறைத்துறை டிஐஜி லக்மிந்தர் சிங் ஜாகர் வேளாண் சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்காக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு, “நான் முதலில் விவசாயி, பிறகு தான் போலீஸ்காரன்” என அறிவிக்கிறார்.
நாங்கள் படிக்காத பாமரன் அல்ல நன்கு படித்து பட்டம் பெற்ற கற்றறிந்த விவசாயிகள் “WE ARE WELL EDUCATED (PHD) FARMERS” என்னும் பதாகைகளை கையில் ஏந்தி இளைஞர்கள் போராடுகின்றனர்.
ஒரு பத்திரிக்கை நிருபர் ஒரு பெண்ணிடம், “நீங்கள் விவசாயி இல்லை என்கிற போது எதற்காக போராடுகிறீர்கள்?” என்று கேட்டார் அதற்கு அந்த பெண் ” என்னுடைய குழந்தைகளுக்கு நாளைக்கு சாப்பிடுவதற்கு ரொட்டி வேண்டும் விவசாயிகள் இல்லையேல் விவசாயம் இல்லை நாம் உணவிற்கு எங்கே போவது? அதனால் தான் நான் போராடுகிறேன்” என்றார்.
இப்படி சரியான புரிதலுடன் தீர்க்கமாக போராடுபவர்களை மோடி அமித்ஷா நிர்மலா சீதாராமன் போன்ற கார்ப்பரேட் கைக்கூலிகள், இந்த சட்டதிருத்தத்தில் உள்ள நன்மைகள் தெரியாமல் போராடுகிறார்கள் என்று கொச்சைப்படுத்துகிறார்கள்.
விவசாயிகளும் இளைஞர்களும் மக்களும் அரசு அதிகாரிகளும் உணவை உட்கொள்ளும் ஒவ்வொருவரும் இந்த வேளாண் சட்டதிருத்த மசோதாவை வாபஸ் வாங்கும் வரை விடாப்பிடியாக வீதியில் இறங்கி போராட வேண்டும்.
அதுவே இப்போராட்டத்திற்காக உயிர்நீத்த தியாகிகளுக்கும் போராடிக் கொண்டிருக்கும் விவசாய பெருமக்களுக்கும் நாம் செய்யும் கைம்மாறு ஆகும்.
தகவல்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு, மதுரை
000
வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைமையில் தமிழகமெங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைப்பெற்றது. அதன் ஒரு பதியாக 14.12.2020 காலை 10 மணிக்கு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் கோவை மக்கள் அதிகாரம் தோழர்கள் பகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜன் தலைமையில் கலந்துகொண்டனர்.
பல்வேறு ஜனநாயக மற்றும் புரட்சிகர அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். போராட்டத்தின் முடிவில் போலீசு அனைவரையும் கைது செய்தது.
தகவல்
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
