மோடி அரசால் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டம் திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்திய விவசாயத்தை அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் தாரை வார்த்து விவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் கொத்தடிமைகள் ஆக்கி விவசாயிகளின் நிலத்தை பறிக்கும் மிக மோசமான சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் கடந்த 62 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

கடுமையான குளிரிலும் உயிர்த்தியாகம் செய்தும் பூமிப்பந்தில் இதுவரை கண்டிராத வகையில் போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்தி வரும் விவசாயிகளை ஆதரித்தும் மோடி அரசை கண்டித்தும் அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக 26/01/2021 அன்று, திருவாரூரில் மாபெரும் டிராக்டர் பேரணி காவல்துறையின் தடையையும் மீறி நடந்தது. இந்த மாபெரும் பேரணியில் பல்வேறு விவசாய சங்கங்களோடு இணைந்து பல தொழிற்சங்க அமைப்புகள், மாணவர் அமைப்புகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி, திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்பினரும் அவர்களுடன் நூற்றுக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.

படங்கள் :

இந்தப் பேரணிக்கு போலீசு அனுமதி கொடுக்காத சூழலில், தடையை மீறி இந்தப் பேரணி துவங்கியது. உழவர் பேரணியில் கலந்து கொண்ட வந்தவர்களில் பலரையும் தண்டலை என்ற இடத்தில் தடுத்து நிறுத்தியது எடப்பாடி அரசின் போலீசு.

மோடி அரசுக்கு எதிராகவும் எடப்பாடி அரசுக்கு எதிராகவும் இதுபோன்ற போராட்டங்களை ஒடுக்கும் காவல்துறைக்கு எதிராகவும் விண்ணைப் பிளக்கும் முழக்கங்களோடு இந்தப் பேரணியில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் கண்டன உரையாற்றினர்.

போலீசின் தடைகளைத் தகர்த்து முன்னேறிச் சென்ற விவசாயிகளையும் முன்னணியாளர்களையும் இன்று அதிகாலையில் கைது செய்தது போலீசு.

தகவல்
மக்கள் அதிகாரம்
தஞ்சை மண்டலம், திருவாரூர்.
82207 16242

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க