ஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது? || வீடியோ

இந்த தேர்தல் ஜனநாயகம் என்பதே எப்படி ஒரு ஏமாற்று என்பதைப் பற்றி வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்தி முருகன் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர் மருது ஆகியோரின் உரையாடல் !!

மிழக சட்டமன்றத் தேர்தல் – 2021 நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தேர்தல் கட்சிகள் முதல் தேர்தலில் பங்கேற்காத பல்வேறு அமைப்புகள் / கட்சிகள் வரை அனைவரும் மக்களை தேர்தல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொள்ளச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இந்த தேர்தல் ஜனநாயகம் என்பதே எப்படி ஒரு ஏமாற்று என்பதைப் பற்றி வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்தி முருகன் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர் மருது ஆகியோரின் உரையாடல் !! மூன்று பாகங்களாக வெளியிடப்படுகிறது.

தேர்தல் ஆணையம் நேர்மையானதா?

தேர்தல் ஆணையத்தில் இருப்பவர்கள் இந்த அரசு எந்திரத்தில் லஞ்சம் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளே இவர்கள் எப்படி தேர்தலை நேர்மையாக நடத்துவார்கள். தேர்தல் என்றால் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகத்தானே செயல்பட முடியும் போன்ற பல்வேறு விளங்கங்களை அளிக்கிறார்கள் மக்கள் அதிகாரம் தோழர் மருது மற்றும் வழக்கறிஞர் சுரேசு சக்தி முருகன்.

சீமான், கமல் இருவரும் தான் மாற்றா ?

எந்த ஓட்டுக்கட்சிகளும் தற்போது கொள்கையை பற்றியெல்லாம் பேசுவதில்லை. எனக்கு ஓட்டுப்போடுங்கள் என்பது மட்டுமே பிரதானமாக இருக்கிறது. இந்நிலையில் மாற்று என்று கமல், சீமானுக்கு ஓட்டு போடுவதன் மூலம் ஏதும் நடக்கபோவது இல்லை. தி.மு.க-வும் தனது திராவிட கொள்கையில் இருந்து படிப்படியாக குறைந்து கொண்டுவருகிறது. மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்க எந்த திட்டமும் அக்கட்சியிடம் இல்லை.

 

தேர்தலில் ஓட்டு போடுவது மூலம் பாசிசத்தை தடுக்க முடியுமா?

பரவி வரும் பாஜக – ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பாசிசத்தை தேர்தலில் ஓட்டு போட்டு தி.மு.க-வை கொண்டுவருவதன் மூலம் தடுக்கமுடியுமா? நிச்சயம் முடியாது. கார்ப்பரேட் நலன்களுக்கான சேவையில் தி.மு.க-வும் ஓரணியில்தான் இருக்கிறது. மக்களை தாக்கும் பொருளாதார நெருக்கடிகளை தீர்க்க தேர்தல் தீர்வில்லை.

1 மறுமொழி

  1. வினவு போன்ற அமைப்புகள் பாசிச அடிவருடிகள்! கார்பரேட் கைக்கூலிகள்! திமுகவை எதிர்ப்பதின் மூலம் அவர்களின் முகமூடி கிழிகிறது!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க