கொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்

கொரோனா கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி நடத்தப்படும் அதிகாரவர்க்க ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்தி கேள்வி எழுப்புகிறார், ம்க்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் .

கோவையில் இரவு பத்தரை மணிக்கு மேல் உணவு விடுதியைத் திறந்து வைத்திருந்ததற்காக உள்ளே புகுந்து அங்கு உணவருந்திக் கொண்டிருந்த சாதாரண மக்களையும் , கடைப் பணியாளர்கள் மற்றும் உரிமையாளரையும் சரமாரியாக தாக்கியுள்ளார் அப்பகுதி போலீஸ் எஸ்.ஐ.

சி.சி.டிவி-யில் பதிவான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதன் காரணமாகவே அந்த எஸ்.ஐ-யின் காட்டுமிராண்டித்தனம் அம்பலமானது. இதனைத் தொடர்ந்துதான் அந்த காட்டுமிராண்டி போலிசு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

சாதாரண மக்களை ஈவிரக்கமின்றி தாக்கும் போலீசு, இரவு நேர சொகுசு விடுதிகளிலும், சொகுசு பார்களிலும் சென்று என்றாவது இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறதா ? சமூக குற்றத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகள், கிரிமினல்கள் மேல் எந்த அடக்குமுறையையும் இந்தப் போலீசு செய்வதில்லை. ஆனால் சாமானிய மக்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறது என போலீசின் அடக்குமுறைகளுக்கு எதிரான கேள்விகளை எழுப்புகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன்.

பாருங்கள் ! பகிருங்கள் !!

மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க