கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா முதல் நிலையில் ஏற்பாட்ட பாதிப்புக்களைப் படிப்பினையாகக் கொண்டு தற்போது அதற்குத் தகுந்தாற்போல செய்யப்பட வேண்டியவை குறித்து கவனம் செலுத்தாமல் மெத்தனமாக இருக்கிறது அரசு. இது குறித்து மக்கள் அதிகாரம் தோழர் மருது மற்றும் வழக்கறிஞர் சுரேசு சக்தி முருகன் ஆகியோர் உரையாடுகின்றனர். அதனை இரண்டு பாகங்களாக வெளியிட்டிருக்கிறோம் !
பாகம் 1 – கொரோனா தடுப்பூசியை அரசே தயாரிப்பதில்லை ஏன்?
கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் இரண்டு தனியார் நிறுவனங்கள் தயாரித்து இந்திய அரசுக்கு கொடுத்துவருவதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. ஆனால், இந்திய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அதிகமாகக் கிடைக்கச் செய்யும் வகையில் ஏன் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மேலும் தற்போது இரண்டாம் அலை பரவி வருகையில் அதனைக் கட்டுப்படுத்த எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் ஏன் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை. இது குறித்து இந்தக் காணொலியில் வழக்கறிஞர் சுரேசு சக்தி முருகன் மற்றும் மக்கள் அதிகாரம் மருது ஆகியோர் விவாதிக்கின்றனர் !
***
பாகம் 2 – கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் தீர்வுகள் என்ன ?
கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் சூழலில் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய அரசு மக்களை அச்சுறுத்தியும் துன்புறுத்தியும் வருகிறது. “கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்குத் தேவையான பொருட்களை, ஊரடங்கு காலங்களில் எப்படி பெற்றுக் கொள்வார்கள்? அவர்களை எப்படி பாதுகாப்பது?” என்பது போன்ற எந்த அக்கறையும் இல்லாமல் ஊடரங்கை அமல்படுத்தி வருகிறது. இந்த ஊரடங்கை பயன்படுத்தி மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தவும் பார்க்கிறது.
பழைய அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவும் தவறியிருக்கின்றன மத்திய மாநில அரசுகள். மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற சாத்தியமான தீர்வுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுரேசு சக்தி முருகன் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர் மருது ஆகியோர் இந்தக் காணொலியில் விவாதிக்கின்றனர்.
காணொலிகளை பாருங்கள் ! பகிருங்கள் !!