PP Letter head

25.05.2021

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு  போராளிகளின்
அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப் பட வேண்டும் !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு தியாகியானவர்களின் குடும்பத்திற்கு தகுதிக்கேற்ப பணி நியமனத்தை அளித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், 22.5.2018 அன்று நடைபெற்ற போராட்ட வழக்குகள் (சி.பி.ஐ வசம் உள்ள) மற்றும் தனியார் சொத்து மற்றும் பொதுச் சொத்துக்கு ஊறு விளைவித்தல் வழக்குகள் தவிர ஏனைய வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.

படிக்க :
♦ ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்
♦ ஸ்டெர்லைட்டை  நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்

எந்தெந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்ற விவரம் அரசு ஆணையாக  வரும் பொழுது தான் அறிய முடியும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட  மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதுடன் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராடியவர்களின் மீதான வழக்குகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.

தூய காற்றுக்காக தண்ணீருக்காகவும் தொண்ணூற்றி ஒன்பது நாட்கள் போராடிய போதும் செவிடாக கடந்த அரசை தட்டி எழுப்புவதற்காக நூறாவது நாள் லட்சம் பேர் கூடி ஸ்டெர்லைட் மூடுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்தப் போராட்டத்தை சீர்குலைப்பதற்கு அவை திட்டமிட்டு போலீசும் வேதாந்தா நிறுவனமும் சேர்ந்து நடத்திய துப்பாக்கிச்சூடு தடியடியில் 15 பேர் தியாகி ஆனார்கள்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள். பலரின் சொத்துக்களை திட்டமிட்டு சூறையாடியது போலீசு. துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களின் உடலை வைத்துக் கொண்டு பேரம் பேசிய தமிழக அரசின் சதித் தனங்களை  நிராகரித்து  ஸ்டெர்லைட்டை மூடாமல் தங்கள் உறவினர்களின் உடலைப் பெற முடியாது என்பதில் உறுதியாக இருந்தார்கள் வீரமிக்க தூத்துக்குடி மக்கள்.

தூத்துக்குடி மக்களின், தமிழக மக்களின் முக்கிய கோரிக்கைகளான ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதற்கான சிறப்பு சட்டம் இயற்றுவது, துப்பாக்கிச்சூடு நடத்திய, பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸ் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தல், தூத்துக்குடி மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்தல்,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு நினைவுச் சின்னம் அமைத்தல் ஆகியவை இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற பெயரில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஸ்டெர்லைட் திறக்கப்பட்டுள்ளது. இது தூத்துக்குடி மக்களுக்கு ஆறாத வடுவாக மாறியிருக்கிறது.

ஆகவே, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கான சட்டம் இயற்றவும் கொலை செய்த போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டவும் தூத்துக்குடி மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்வதுடன் அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராடியவர்களின் வழக்குகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.


தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க