ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிறந்தரமாக அகற்ற கோரும் விதமாகவும், ஓட்டுக்கட்சிகள் மற்றும் அரசை அம்பலப்படுத்தும் விதமாகவும் மக்கள் அதிகாரம் தர்மபுரி மண்டலம், புரட்சிகர கலைக்குழு தோழர்கள் பாடிய பாடலை காணொளி வடிவில் வெளியிடுகிறோம்!

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், மக்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதைக் காரணமாக வைத்து, ஆக்சிஜன் தயாரித்து தருகிறேன் என்ற பெயரில் தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முற்படுகிறது வேதாந்த குழுமம். அதற்கு அரசியல் கட்சிகள், உச்ச நீதிமன்றம், மத்திய-மாநில அரசுகள் அனைத்து துணை நிற்கிறது.

தூத்துக்குடி மக்களை கேன்சரில் சாகடித்த, காற்றை நஞ்சாக்கிய, எதிர்த்து போராடிய மக்களை கைக்கூலி அரசை கொண்டு சூட்டுக்கொன்ற ஸ்டெர்லைட் தற்போது மக்களுக்கு ஆக்சிஜன் தருகிறேன் என்று சொல்வது ஏமாற்று என்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மண்ணில் இருந்து நிறந்தரமாக அகற்ற வேண்டும் என்பதே அவர்களின் போராட்ட முழக்கம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிறந்தரமாக அகற்ற கோரும் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக மக்கள் அதிகாரம் தர்மபுரி மண்டலம், புரட்சிகர கலைக்குழு தோழர்கள் பாடிய பாடலை காணொளி வடிவில் வெளியிடுகிறோம்!

காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !

பாடல்இசை :
புரட்சிகர கலைக்குழு, தருமபுரி
மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்
செல்: 97901 38614

சமூக மாற்றத்திற்கான புரட்சிகர பாடல்களை தொடர்ந்து கொண்டுவர நிதி கொடுத்து ஆதரவு தாருங்கள் !

பெயர் : Gopinath P
கணக்கு எண் : 6720415617
வங்கி விவரம் : Indian Bank, Pennagaram Branch
IFSC NO : IDIB000P076

பாடல் வரிகள் :

வீரவணக்கம் ! வீர வணக்கம் !
ஸ்டெர்லைட் போரில் உயிர்நீத்த
தியாகிகளுக்கு வீரவணக்கம் ! (2)

விடமாட்டோம் விடமாட்டோம்
ஆலையை திறக்க விடமாட்டோம் (2)

தூத்துக்குடி தியாகிகளின்
உதிரம் இன்னும் காயல
ஸ்டெர்லைட்டை விரட்டாமல்
எதிர்காலமே இல்ல இல்ல (2)
கட்சிகளெல்லாம் ஒரே கூட்டணி
கார்ப்பரேட்டுக்கு கைக்கூலி (2)

மாண்டுப்போன தியாகிகள் உயிறு
கேள்வி கேக்குது பதில்சொல்
பதில்சொல் பதில்சொல்
கேள்வி கேக்குது பதில்சொல் (2)

மீண்டும் வருது நச்சுக்காத்து
நிதீமன்றம் அடிக்குது கூத்து (2)
மக்களுக்கில்ல மக்களுக்கில்ல
கலெக்டரும் போலீசும்
அடியாளு அடியாளு (2)
கார்ப்பரேட்டுக்கு அடியாளு (2)

ஆக்சிஜனை கொடுக்கிறேனு
கதை அலக்கிறான் டி.வி.யில
விஷ காத்துல கொன்னவன்
நல்ல காத்து கொடுக்கிறானாம் (2)
கேலிக்கூத்து கேலிக்கூத்து
கைக்கூலிகளின் கேலிக்கூத்து (2)

உதவது உதவாது
பாராளுமன்றம் உதவாது
இறங்கிடுவோம் இறங்கிடுவோம்
வீதியில் உடனே இறங்கிடுவோம். (2)

வீடியோ ஆக்கம்
வினவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க