இந்தியாவை ஆளும் காவி – கார்ப்பரேட் பாசிச ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல், வேளாண் திருத்தச் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து கார்ப்பரேட்டுகளிடம் விவசாயத்தை தாரைவார்ப்பதையும், பணமாக்கல் திட்டம் மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதையும், பெட்ரோல் – டீசல் வரி மூலம் மக்களைச் சுரண்டுவதையும், கல்வியில் காவி கருத்துக்களை புகுத்துவதையும், காவிக் குண்டர்கள் மூலம் கலவரங்கள் நடத்தப்படுவதையும், மக்களை சாதியாகவும், மதமாகவும் பிரிப்பதையும் எதிர்த்து அனைவரும் காவி – கார்ப்பரேட் பாசிசக் கும்பலை எதிர்த்துப் போரிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய உழைக்கும் மக்களுக்கு அறைகூவல் விடுக்கும் விதமாக, “உழவர் படை ஒன்று கட்டிடு; காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்திடு” எனற இந்தப் பாடலை தருமபுரி மாவட்டம், மக்கள் அதிகாரம் அமைப்பின் புரட்சிகர கலைக்குழுவைச் சேர்ந்த தோழர்கள் பாடல் காணொலியை தயாரித்துள்ளனர்.
பாடல் வரிகள்
வேளாண் சட்டத்தை வீழ்த்திட போரிட்ட
விவசாயிகள் கொடுத்த உயிருக்கு பழிதீர்க்க
உழவர் படை ஒன்று நீ கட்டிடு
காவி – கார்ப்பரேட் பாசிசம் வீழ்த்திடு
உ.பி. விவசாயிகளை கார் ஏற்றி கொன்றானே
காவிகள் கூட நின்னு போலீசும் சுட்டானே
டெல்லி போராட்டத்தில் கலவரம் செய்தானே
கலவரம் செய்ய துணை ராணுவம் நின்றானே
உழவர் படை ஒன்று நீ கட்டிடு
காவி – கார்ப்பரேட் பாசிசம் வீழ்த்திடு
கருப்பு பணம் ஒழிப்பேன்னு கதையளந்து விட்டானே
பணமாக்கும் திட்டமின்னு பொதுத்துறையை விற்றானே
ரயில்வே தொலைத்தொடர்பை கூவி அவன் கொடுத்தானே
மக்களது பொது சொத்தை ஏலத்தில் விட்டானே
உழவர் படை ஒன்று நீ கட்டிடு
காவி – கார்ப்பரேட் பாசிசம் வீழ்த்திடு
பெட்ரோல், டீசல் விலை மக்கள் பணம் கருகுது
தினமாயிரம் கோடி அதானி பை நிறையுது
நம்ம ஏர் இண்டியா டாடா கை மாறுது
ஒரு வேளை உணவின்றி நம் வயிறு காயுது
உழவர் படை ஒன்று நீ கட்டிடு
காவி – கார்ப்பரேட் பாசிசம் வீழ்த்திடு
கல்வியில் காவியை கண்ணெதிரே கலக்குறான்
காட்டிக் கொடுத்த சாவர்க்கரை தியாகியின்னு திரிக்கிறான்
சாதியின்னு மதமின்னு மக்களைதான் பிரிக்கிறான்
காவிப்படை கட்டி அவன் கலவரத்தை நடத்துறான்
உழவர் படை ஒன்று நீ கட்டிடு
காவி – கார்ப்பரேட் பாசிசம் வீழ்த்திடு