PP Letter head

பத்திரிக்கைச் செய்தி !

04.05.2021

ஸ்டெர்லைட் கங்காணிக் குழுவைப் புறக்கணிப்போம் !
ஸ்டெர்லைட்டை  நிரந்தரமாக அகற்றுவோம் !

“இலட்சம் மக்கள் கூடுவோம் ! ஸ்டெர்லைட்டை மூடுவோம்!” என்று போராடி போலீசால் சுட்டுக்கொல்லப்பட்டும் முடமாக்கப்பட்டும் சொத்துக்களை இழந்த தூத்துக்குடி மக்கள் கேட்டதெல்லாம் சுத்தமான காற்றையும் நீரையும் தான்.

பல ஆண்டுகளாகப் போராடிய மக்கள் அரசும் தேர்தல் அரசியல் கட்சிகளும் மக்களுக்கானவை அல்ல என்பதை தங்கள் சொந்த அனுபவத்தின் ஊடாகவே உணர்ந்ததன் விளைவுதான் மே 22-ஆம் தேதி நடைபெற்றப் போராட்டம்.

படிக்க :
♦ புறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்

♦ ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி : தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி !

கொரோனாவினால் மக்கள் கொத்துக்கொத்தாக செத்துக் கொண்டிருக்கும் அவல நிலையைப் பயன்படுத்தி வேதாந்தா முதலாளியோடு நீதிமன்றமும் அனைத்துக் கட்சிகளும் கூட்டு சேர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்துவிட்டன. தூத்துக்குடி மக்களை கலந்து ஆலோசனை செய்யாமலேயே அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் வேதாந்தாவின் எடுபிடிக் கட்சிகளைக் கூட்டி ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினால் மட்டும்தான் இந்தியாவின் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க முடியும் என்ற பொய்ப் பிரச்சாரத்தை மக்கள் எப்போதும் நம்பத்தயாராக இல்லை.  இந்திய உருக்காலை நிறுவனங்கள், பெட்ரோலிய நிறுவனங்கள், பெல் தொழிற்சாலை போன்றவற்றின் மூலம் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க முடியும் என்று பல்வேறு தொழிற்சங்கங்களும் வல்லுனர்களும் தெரிவிக்கிறார்கள். இவற்றையெல்லாம் புறக்கணித்து சதி செய்து மத்திய – மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் எல்லாம் கூட்டுச் சேர்ந்து சதி செய்து ஸ்டெர்லைட்டை திறக்கின்றன

ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடக் கூடாது என்பதற்காகவே தூத்துக்குடி மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்த அரசும் கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய குழுதான் கண்காணிப்புக் குழு. இது கண்கணிப்புக்குழு அல்ல; கங்காணி குழு.

மக்கள் போராட்டங்களை ஒழித்துக் கட்டவும் ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட குழுவே ஆகும். ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று என்று மக்கள் கோரிக்கை வைத்து மக்கள் போராடும் போது அதை நீர்த்துப் போகச் செய்வதன் நோக்கத்தின் அடிப்படையிலேயே இக்குழு உருவாக்கப்படுகிறது.

கண்காணிப்புக் குழுவில் இடம் பெறுவோமேயானால் அது எல்லா வகையிலும் ஸ்டெர்லைட்டை பாதுகாப்பதற்கான ஒன்றகவே இருக்கும். இதற்காகவா தூத்துக்குடி மக்கள் வாயில் சுடப்பட்டும் நெஞ்சில் சுடப்பட்டும் இறந்து போனார்கள்? எண்ணற்ற வழக்குகளை சந்தித்தார்கள்?

ஸ்டெர்லைட்டுக்கெதிரான போராட்டத்தை மக்கள் தொடங்கும் போதும் சரி, இப்போதும் சரி அவர்கள் எந்த பின்புலத்தையும் எதிர்பார்த்து அல்ல; தங்கள் சொந்த பலத்தையே நம்பி நின்றார்கள், நிற்கிறார்கள். “ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று !”  என்ற முழக்கத்தை முன்வைப்போம். அரசின், கட்சிகளின் சந்தர்ப்பவாதப் பாதையை நிராகரிப்போம். ஸ்டெர்லைட் கண்காணிப்புக் குழுவைப் புறக்கணிப்போம் !


தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க