வர்க்கப் போராட்டத்தில் உயிர் நீத்த நக்சல்பாரி புரட்சியாளர்கள் தோழர்கள் அப்பு, பாலன் ஆகியோரின் 41-வது நினைவு நாள் வாழ்க !
ருமபுரி நாய்க்கன்கொட்டாய் பகுதியில் உள்ள நக்சல்பாரி புரட்சியாளர்கள் தோழர்கள் அப்பு, பாலன் இருவரின் சிலைகளுக்கு அவர்களின் நினைவாக செப்டம்பர் 12 அன்று  பேரணியாகச் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவஞ்சலி கூட்டமும் நடத்தப்பட்டது.
இந்த பேரணிக்கு இந்திய பொதுவுடைமை கட்சி (மாலெ)-ஐ சேர்ந்த தோழர் வில்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தோழர் சித்தானந்தம் அவர்கள் கொடியேற்றி மாலை அணிவித்தார். இதனையெடுத்து ம.ஜ.இ.மு-வைச் சேர்ந்த தோழர் பெரியண்ணன் நினைவஞ்சலி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக மக்கள் அதிகாரம் தோழர்கள் வர்க்க போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக புரட்சிகர பாடல் பாடினர்.
இதனையெடுத்து நினைவேந்தல் உரையாக, மக்கள் அதிகாரம் வட்டார ஒருங்கிணைப்பு குழுவின் தோழர் ராஜா, இ.பொ.க (மா.லெ)-(விடுதலை)-ஐச் சேர்ந்த தோழர் கோவிந்தராஜ் , மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் டேவிட் செல்லப்பா, இ.பொ.க (மா.லெ)-வைச் சேர்ந்த தோழர் சுசீலன், தோழர் ரமணி, தோழர் குணாளன், ம.ஜ.இ.மு-வைச் சேர்ந்த தோழர் பழனி, உள்ளிட்டோர் நினைவேந்தல் உரையாற்றினர்.
இறுதியாக தோழர் பரசுராமன் நன்றியுரை ஆற்றினார்.
தகவல்
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
9790138614

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க