நக்சல்பாரி அமைப்பில் தனது இளமைக்காலம் முதல் (50 ஆண்டுகளுக்கும் மேலாக) இயங்கி வந்த தோழர் சுப்பிரமணி அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று (04.11.2021) காலை சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.
நக்சல்பாரி அரசியலால் ஈர்க்கப்பட்டு, தனது முதுகலை பட்டத்தைக்கூட கிழித்தெறிந்துவிட்டு மார்க்சிய – லெனினிய அரசியலுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். கீழைக்காற்று வெளியீட்டகத்தின் துவக்க கால வளர்ச்சியில் அவரது பங்களிப்பு மகத்தானது. பு.ஜ.தொ.மு-வுக்காக பல்வேறு ஆங்கிலக் கட்டுரைகள், ஆவணங்களை மொழிபெயர்ப்பு செய்து முன்னணியாளர்களது புரிதல் மட்டத்தை உயர்த்தியுள்ளார்.
