க்சல்பாரி அமைப்பில் தனது இளமைக்காலம் முதல் (50 ஆண்டுகளுக்கும் மேலாக) இயங்கி வந்த தோழர் சுப்பிரமணி அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று (04.11.2021) காலை சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். அமைப்பில் நடந்த சீர்குலைவு நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்துப் போராடியவர் தோழர் சுப்பிரமணி.
நக்சல்பாரி அரசியலால் ஈர்க்கப்பட்டு, தனது முதுகலை பட்டத்தைக்கூட கிழித்தெறிந்துவிட்டு மார்க்சிய – லெனினிய அரசியலுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். கீழைக்காற்று வெளியீட்டகத்தின் துவக்க கால வளர்ச்சியில் அவரது பங்களிப்பு மகத்தானது. பு.ஜ.தொ.மு-வுக்காக பல்வேறு ஆங்கிலக் கட்டுரைகள், ஆவணங்களை மொழிபெயர்ப்பு செய்து முன்னணியாளர்களது புரிதல் மட்டத்தை உயர்த்தியுள்ளார்.
தனது குடும்பத்தினர் அனைவரையும் அமைப்பு வேலைகளில் ஈடுபடுத்தினார். அவரது துணைவியார் தோழர் சத்யா போர்க்குணமிக்க போராளி. மகன்கள் இருவரும் அமைப்பு வேலைகளில் வெவ்வேறு மட்டங்களில் பங்கெடுத்து வருபவர்கள்.
தோழர் சுப்பிரமணி அவர்களது இழப்பை நக்சல்பாரி அமைப்பின் இழப்பாக கருதுகிறோம். தோழர் சுப்பிரமணி அவர்களுக்கு செங்கொடி தாழ்த்தி சிவப்பஞ்சலி செலுத்துகிறோம்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
இவண்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
தமிழ்நாடு.
தொடர்புக்கு : 80563 86294.

1 மறுமொழி

  1. தடம் மாறாத சமத்துவ போராளி தோழர் சுப்பிரமணி அவர்களுக்கு வீரவணக்கம்,எளிமை அற்பணிப்பு -தன்னல மறுப்பு ,சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் அவரது நம்பிக்கை,போன்றசிறந்த கம்யூனிஸ்டுகளுக்கு உரிய குணநலன்களை பின்பற்ற உறுதி ஏற்போம், மறைந்த தோழருக்கு சிவப்பு அஞ்சலி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க