ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஜனவரி 21: பாட்டாளி வர்க்க பேராசான் தோழர் லெனின் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாள் ஆலைவாயில் கூட்டம் 22.01.2023 அன்று நடத்தப்பட்டது.
கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தோழர் சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார். தோழர் லெனின் அவர்களின் நினைவு நாளை ஏன் உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்பதையும், தோழர் லெனின் வழியில் செயல்பட்டு நம்மை சூழ்ந்துவரும் பாசிசத்தை வீழ்த்துவதற்கு உறுதி ஏற்க வேண்டும் என தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சக்திவேல் அவர்கள் சிறப்புரையாற்றினார். அனைத்து அதிகார மட்டத்திலும் ஆர்.எஸ்.எஸ்-இன் சேவகர்களை அதிகாரிகளாக நியமித்து, மேலும் தன்னுடைய பாசிச சர்வாதிகாரத்தை நடமுறைபடுத்துவதற்கு தீவிரமாக வேலை செய்து வருகிறது மோடி அரசு. வறுமை, பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம், பாசிச அடக்குமுறை சட்டங்கள் போன்றவற்றால் உழைக்கும் மக்கள் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.
இப்படி 10 ஆண்டுகால மோடியின் அவலங்களை மக்களிடமிருந்து மறைப்பதற்கு தன்னை புனிதவராக காட்டிக் கொள்வதற்கே ராமர் கோவிலை கட்டி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ராமர் கோயில் என்ற பெயரில் காவிக் கும்பல் செய்கின்ற அட்டூழியங்களையும் அநியாயங்களையும் உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்தினார். தொழிலாளர்கள் வர்க்கமாக ஒன்றிணைந்து காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவதற்கு மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை உயர்த்தி பிடிப்போம் வாருங்கள்! தோழர்களே என்று அறைகூவல் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.
இறுதியாக, சங்கத்தின் இணைச் செயலாளர் தோழர் சண்முகம் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். கூட்டத்தில் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்:
டி.ஐ மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கம்,
(இணைப்பு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – மாநில ஒருங்கிணைப்புக் குழு)