அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. நமது நாடு எந்த திசையில் செல்லப் போகிறது என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல் இது.

கடந்த பத்தாண்டுகள் இந்தியாவை சூறையாடிய பாசிச மோடி-அமித்ஷா கும்பல், மூன்றாவது முறையாக இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 370 இடங்களில் வெற்றியடைந்து, மூன்றில் இரண்டு பங்கு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துவிடலாம் என்று கருதிக் கொண்டிருக்கிறது.

இதற்காக அரசு அதிகாரத்தில் ஊடுருவியிருக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலைப் பயன்படுத்தி பல்வேறு சதி நடவடிக்கைகள், மோசடி, முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது.

தேர்தல் கமிசன், அமலாக்கத்துறை மூலமாக எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுப்பது; மின்னணு இயந்திரங்கள் மூலம் மோசடி செய்வது; வடமாநிலங்களில் இந்துமதவெறியையும் தென்மாநிலங்களில் வளர்ச்சியையும் முன்னிறுத்தி மக்களை ஏமாற்றுவது; மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும் பொய் செய்திகளையும் பரப்பி மோடியை தேசியத் தலைவராகக் காட்டுவது; சங்கப் பரிவார கும்பல் மூலமாக வதந்திகளைப் பரப்புவது, இசுலாமிய வெறுப்புப் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்துவது, திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலான அடுத்தடுத்த தொடர் நடவடிக்கைகள் மூலமாக மக்கள் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் பல்வேறு தாக்குதல்களைத் தொடுப்பது, வேறெதையும் சிந்திக்கவிடாமல் அச்சத்திற்குள்ளாக்குவது போன்றவை மோடி-அமித்ஷா கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு சில சான்றுகள் மட்டுமே.

மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஏற்ற வகையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் கமிஷன் வகுத்திருப்பது; தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிடுவதில் எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரிகள் உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் மீறி செயல்பட்டு மோடி-அமித்ஷா கும்பலைக் காப்பாற்ற முனைவது; தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிரிய சமிதியின் தலைவர் கவிதாவை அமலாக்கத்துறையை ஏவி கைது செய்திருப்பது போன்ற மோடி-அமித்ஷா கும்பலின் மிக அண்மைய நடவடிக்கைகள், இந்த தேர்தலில் வெற்றிபெற மோடி-அமித்ஷா கும்பல் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கான சான்றுகளாகும்.

வெளியீடு:
பாசிச பா.ஜ.க.வைத் தேர்தலில்
வீழ்த்துவது எப்படி?

வெளியிடுவோர்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு-புதுவை

முதல் பதிப்பு: மார்ச் 2024

தொடர்புக்கு:
97916 53200 – 94448 36642
73974 04242 – 99623 66321

நன்கொடை: ரூ.20/-

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க