
முகப்பு செய்தி தமிழ்நாடு NEP-2020 : நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் திமுக – அமைதி காக்கும் கூட்டணிக் கட்சிகள் !
NEP-2020 : நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் திமுக – அமைதி காக்கும் கூட்டணிக் கட்சிகள் !
கல்வியை காவிமயம், கார்ப்பரேட்மயமாக்கும் சதியே புதிய கல்விக் கொள்கை. மனித இனத்தால் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய அந்த நரகலில் இருந்து நல்லரிசி பொறுக்கி சமைக்கப் போவதாக சொல்லியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழ்நாட்டின் தனித்துவத்தை ஒழித்துக்கட்டியே தீருவது என்று பாஜக வும் சங்க பரிவாரங்களும் கங்கணம் கட்டி ஸ்டாலின் அரசை பிரிவினைவாதிகள் பயங்கரவாதிகள் ஆகியோரை ஊட்டி வளர்க்கும் அரசாக பிரச்சாரம் செய்துக்கொண்டிருக்கிறார்கள்.பெரியாரையும் அம்பேத்கரையும் ஒரு அரசு என்ற முறையில் கொண்டாடி வருவதை பாஜகவினரால் பொறுக்கமுடியாமல் ஆட்சியை கலைப்பது என்றே செயல்படுகிறார்கள்.முப்படை தளபதி விபத்தில் இறந்த விவகாரத்திற்கு கொண்டாடி மகிழழ்ந்ததாகவும் இது பிரிவினைவாதிகள் போல மாறியிருப்பதாக தமிழக மக்களை கேவலபடுத்தி ட்வீட் போட்ட மாரிதாஸை கைது செய்து ராஜதுரோக பிரிவில் வழக்கு பதிவுசெய்தது.சங்க பரிவாரங்களை விட வேகமாக முதல் வேலையாக எடுத்து கைதான 2 நாட்களில் முதல்தகவலறிக்கையை கேன்சல் செய்து மாரிதாஸை விடுவிக்கிறார் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி.அவர்களை விட கோபமாக ஸ்டாலினை ஏசுகிறார் கட்டுரையாளர்.ஸ்டாலின் என்ன செய்வார்?மம்தா வை போல போராட்டத்திலேயே வளர்ந்தவரல்ல இவர்.ஏதாவது சிறு தவறு நிகழ்ந்தாலும் ஆட்சியை கலைத்து கவர்னர் ஆட்சியை அமுல்படுத்த தயாராக களத்தில் இருக்கிறார்கள் பாஜகவினர்.கவர்னரும் தனது ஆட்டத்தை துவங்கியிருப்பதாக செய்திகள் சொல்லுகின்றன.யதார்த்தத்தை குறைத்து மதிப்பிட வேண்டுமா?குறைந்த பட்சமாகவாவது தனது ஆட்சியை தக்க வைக்கும் ஆசை இருக்கத்தானே செய்யும்..விமர்சனம் செய்யவேண்டும்.அதை ஜனநாயகபூர்வமாக செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்.தவறுகளை களைந்துகொள்ளவேண்டும் என்ற கண்டிப்புடன் செய்யலாம்.ஆனால் கட்டுரையாளர் யார்மீதொ இருக்கும் கோபத்தை ஸ்டாலின் மீது காட்டி ‘தரம்தாழ்ந்த அரசு’என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவராக இருக்கிறது.ஒரு சமரசவாத சக்தியிடம் என்ன எதிர்பார்க்கமுடியும்.காவி கார்ப்ரேட் பாசிச த்தை எதிர்த்தொழிக்க வேண்டிய அபாயமான காலகட்டம்.ஸ்டாலின் அரசை பற்றி விமர்சனங்களை ஆழ்ந்த ஆய்வு திறனோடு வைப்பதே மக்களையும் சென்றடையும். அதுதான் நல்லது.அம்பலபடுத்தி மக்களிடம் தனிமைபடுத்த அப்படித்ததானே செய்யவேண்டும்.ஸ்டாலின் தன்னை ஒரு ஜனநாயகவாதியாக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்.அது உண்மைதானே.மாரிதாஸ் கைது விவகாரம் பற்றி ஏன் கட்டுரை வரவில்லை?
ஸ்டாலின் அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாமல் நிறுத்துவதால் ஆட்சியைக் கலைக்குமளவிற்கு ஆர்.எஸ்.எஸ்> இன்னும் பெருவீத அடித்தளத்தை இன்னும் தமிழகத்தில் பெறவில்லை. ஆனால் காவி கும்பல் பாசிச ஆதரவு தளத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக கொண்டுவந்திருக்கும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால், கண்டிப்பாக ஓரிரு ஆண்டுகளில் மக்கள் அடித்தளத்தை ஆர்.எஸ்.எஸ். அமைத்துவிடும். ஆர்.எஸ்.எஸ். அபாயம் என்பது இந்து ராஷ்டிர அபாயம் என்பது தாங்கள் அறியாததல்ல.
இந்து ராஷ்டிரத்தை தடுத்து நிறுத்த வேண்டுமெனில், ஒரே வழி காவி சித்தாந்தமும் திட்டங்களும் மக்களைச் சென்றடையவிடாமல் தடுத்து நிறுத்தவேண்டிய கடமை பாசிச் எதிர்ப்பாளர்க்ள் ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்த வகையில் தான் இதை நைச்சியமாக செய்யாமல் தனது பொறுப்பை தட்டிக் கழித்து வரும் ஸ்டாலின் ஆட்சியை சாட வேண்டிய அவசியம் இருக்கிறது.
மக்களும் ஜனநாயக சக்திகளும் ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக திமுகவிற்கு ஓட்டுப் போடவில்லையே. பாசிசக் கும்பலுக்கு அடிபணிந்து போகாத ஒரு அரசு வேண்டும் என்றுதானே ஓட்டுப் போட்டார்கள். அதிலிருந்துதான் இந்த விமர்சனம்.
மாரிதாஸ் கைது, ஜக்கி வாசுதேவ் என அனைத்திற்கும் கட்டுரைவரும் தோழர்..
ஆரோக்கியமான விவாதத்தை துவக்கியதற்கு நன்றி தோழர்..
தோழரே தங்களின் பதிலுரைக்கு நன்றிகள்.புதிய கல்வி கொள்கை யின் அபாயகரமான பகுதியை தங்களின் பதிலில் பார்க்கிறேன்.சம்பந்தபட்ட கட்டுரையில் அப்படிப்பட்ட ஒரு உணர்வை எழுப்ப தவறிவிட்டார் என்பதுதான் எனது விமர்சனம்.”இந்து ராஷ்டிரத்தை தடுத்து நிறுத்த வேண்டுமெனில், ஒரே வழி காவி சித்தாந்தமும் திட்டங்களும் மக்களைச் சென்றடையவிடாமல் தடுத்து நிறுத்தவேண்டிய கடமை பாசிச் எதிர்ப்பாளர்க்ள் ஒவ்வொருவருக்கும் உண்டு. “நிச்சயமாக. இது பற்றி ஏற்கனவே வினவு விரிவாக பேசியிருப்பது உண்மைதான்.இந்த கட்டுரையின் பெரும்பகுதி தமிழ்நாட்டு மண்ணில் ஒரு பாசிசத்தின் வேரை பதியசெய்யும் முயற்சியை பற்றி விளக்கி அதனடிப்படையில் தமிழக அரசை விமர்சிக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறேனே தவிர கட்டுரையாளரின் நோக்கத்தை சந்தேகிக்கவில்லை.இந்துராஷ்டிர பாசிச அபாயத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் இந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கவேண்டும் .பாஜகவை ஈவு இரக்கமின்றி அம்பலபடுத்தி சாடி சண்டையிடுவதற்கும் தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கும் -குறிப்பாக ஸ்டாலினை-(சந்தர்ப்பவாதி சமரசவாதி என்றாலும்)கொஞ்சம் வித்தியாசம் காட்டவேண்டும் என்பதே வேண்டுகோள்.நமது விமர்சனம் குறிப்பான முதல் பயங்கரவாத பாசிஸ்டுகளுக்கு எதிராக மக்களை விழிப்படைய செய்யவேண்டும்.போராட்டகளமாக தமிழகம் மாறவேண்டும் என்ற அடிப்படையில் இருக்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
//பாஜகவை ஈவு இரக்கமின்றி அம்பலபடுத்தி சாடி சண்டையிடுவதற்கும் தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கும் -குறிப்பாக ஸ்டாலினை-(சந்தர்ப்பவாதி சமரசவாதி என்றாலும்)கொஞ்சம் வித்தியாசம் காட்டவேண்டும் என்பதே வேண்டுகோள்.//
எனது உள்ளக் கிடக்கை நீங்கள் விவரித்திருக்கிறீர்கள் தோழர். வெளியேறிய தோழர்களின் கருத்துக்களுக்கு நேர் எதிரான கருத்துக்களை கொள்ள வேண்டும் என்ற ‘வீம்பை’ வினவு தோழர்கள் கைகொள்ளுகிறார்களோ என்று பலசமயம் எண்ணத் தோன்றுகிறது.
இருப்பினும் புதிய கல்வி கொள்கை விசயத்தில் திமுகவின் நைச்சியம் ஆத்திரமூட்டுகிறது. இதற்காக ஆட்சியை இழந்தாலும் இப்போது இருக்கும் சூழலில் மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும். இந்த உண்மையை சங்கிகளும் புரிந்து வைத்துள்ளார்கள் எனும் வினவின் கூற்று சரியாகத்தான் படுகிறது. மீறி ஆட்சி கலைப்பிற்கு முயற்சித்தால் நாம் அனைவரும் ஓரணியாகி அதை எதிர்க்க வேண்டும்.
நீங்கள் கூறியபடி “ஸ்டாலின் அரசை பற்றி விமர்சனங்களை ஆழ்ந்த ஆய்வு திறனோடு வைப்பதுடன்” இந்த மாதிரி சவுடால்களை கைகொள்ளும்போது திமுகவின் ‘டவுசரை’ கழட்டத்தான் வேண்டும்.
வேளான் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியவர்கள் பெரும்பாலும் பஞ்சாபை சேர்ந்த சீக்கிய விவசாயிகள் தான். போராட்டம் மிக நியாயமான ஒன்று என்பதால் உலகெங்கிலும் இருந்து ஆதரவு கிட்டியது. பக்கத்தில இருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்திலும் போராட்டம் பரவ தொடங்கியதால் ஆடிப்போன மோடி அரசு சட்டங்களை வாபஸ் வாங்கியது. ஆனால் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராட்டம் ஏதாவது தமிழ்நாட்டில் நடந்தால் நிச்சயம் அது பிசுபிசுக்கும். பக்கத்தில் இருக்கும் கேரள கம்யூனிஸ்டுகளே ஆதரவு தர மாட்டார்கள் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் இப்படித்தான் பிசுபிசுத்தது. சமச்சீர் கல்வி என்னும் தண்டம், குப்பையை போன்ற பாடப்புத்தகங்கள். மனப்பாட கல்வி முறை, ஜேக்டோ ஜியோ கும்பலின் அராஜகம், மாநில அரசு கல்வி நிறுவனங்களில் அடி முதல் முடிவரை ஊழல் மற்றும் அரசியல் தலையீடு ஆகியவற்றால் தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து யாரும் ஆதரவு அளிக்க மாட்டார்கள். சில்வண்டுகளின் கனவு நிறைவேறாது. மேலும் மாநில அரசு என்பது சர்வ வல்லமை மிகுந்த மத்திய அரசின் கீழ் வரக்கூடிய லோக்கல் நிர்வாகம் மட்டுமே. மாநில ஆட்சியாளர்கள் ஊழலும் குடும்ப அரசியலும் செய்து மாட்டிக் கொண்டு விழிக்கிறார்கள்.
“ஆனால் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராட்டம் ஏதாவது தமிழ்நாட்டில் நடந்தால் நிச்சயம் அது பிசுபிசுக்கும். பக்கத்தில் இருக்கும் கேரள கம்யூனிஸ்டுகளே ஆதரவு தர மாட்டார்கள் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் இப்படித்தான் பிசுபிசுத்தது. சமச்சீர் கல்வி என்னும் தண்டம், குப்பையை போன்ற பாடப்புத்தகங்கள். மனப்பாட கல்வி முறை, ஜேக்டோ ஜியோ கும்பலின் அராஜகம், மாநில அரசு கல்வி நிறுவனங்களில் அடி முதல் முடிவரை ஊழல் மற்றும் அரசியல் தலையீடு ஆகியவற்றால் தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து யாரும் ஆதரவு அளிக்க மாட்டார்கள். சில்வண்டுகளின் கனவு நிறைவேறாது”நீங்கள்தான் அந்த சில்வண்டு.உங்கள் கனவு பலிக்காது.புதிய கல்விக்கொள்கையின் உண்மையான நோக்கத்தை வீச்சான முறையில் பிரச்சாரத்தை மாணவர்களிடம் கொண்டுசென்றால் தமிழகம் சாதிக்கும்.இந்தி எதிர்ப்பு போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம் இன்னும் எத்தனையோ போராட்டங்களை வெற்றிகரமாக சாதித்த மண் இந்த தமிழகம்.சமச்சீர் கல்வியை தண்டம் என ஆரம்பிக்கும் உங்களின் நோக்கம் யார் என வெளிப்படுத்துகிறது.’சமச்சீர்’ அந்த வார்த்தையே சிலருக்கு எட்டிகாயாக கசக்கும்.என்ன செய்ய?புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு போராட்டகளத்தில் முன்னெடுக்கும். சாதிக்கும்.
அய்யய்யோ..! பெரிய’ஸ்’வாமிய டச் பண்ணிட்டீங்களா தோழர்..!!
தெரியாத்தனமா நரகல்ல காலை வச்சிட்டீங்களே..!!!