மக்கள் அதிகாரம் – முதலாவது மதுரை மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!
மக்கள் அதிகாரம், மதுரை மண்டலத்திற்கு ஐந்துபேர் செயற்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மதுரை மண்டலச் செயலாளராக தோழர் குருசாமி, மண்டலப் பொருளாளராக தோழர் பரமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முதலாவது மதுரை மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
அன்பார்ந்த உழைக்கும் மக்களே !
முதலாவது மதுரை மண்டல மாநாடு 19.1.2022 அன்று வெற்றிகரமாக நிறைவேறியது. மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் முறைப்படி தேர்தல் நடைப்பெற்று நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி மண்டல குழுவிற்கான தேர்தல் , தேர்தல் அலுவலர்களான தோழர்கள் வெற்றிவேல் செழியன், சாந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மண்டலத்திற்கு ஐந்துபேர் செயற்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
மதுரை மண்டலச் செயலாளராக தோழர் குருசாமி, மண்டலப் பொருளாளராக தோழர் பரமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
1 of 4
போடி கிளைச் செயலாளராக AT கணேசன், ராஜபாளையம் கிளைச் செயலாளராக தோழர் முருகன், திருமங்கலம் கிளைச் செயலாளராக தோழர் பரமன், உசிலை கருக்கட்டான்பட்டி கிளைச் செயலாளராக தோழர் ஆண்டவர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும்
காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைப்போம் ! புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம் !
ஆகிய முழக்கங்களின் அடிப்படையில் செயல்படுவோம் என உறுதியேற்றனர்.
தோழமையுடன் தோழர் குருசாமி
மதுரை மண்டல செயலர்
மக்கள் அதிகாரம் 78268 47268
ஐனநாயக குடியரசு நாளைக் கொண்டாட களம் காண்போம். காலம் கனியும் வரை காத்திருப்போம்.. சிதறிக் கிடக்கும் தீக்குச்சி களை ஒன்று சேர்ப்போம். மக்கள் அதிகாரம் தலைமை தாங்கட்டும். மக்கள் சக்தியே மாபெரும் சக்தி என நிரூபிப்போம்.
ஐனநாயக குடியரசு நாளைக் கொண்டாட களம் காண்போம். காலம் கனியும் வரை காத்திருப்போம்.. சிதறிக் கிடக்கும் தீக்குச்சி களை ஒன்று சேர்ப்போம். மக்கள் அதிகாரம் தலைமை தாங்கட்டும். மக்கள் சக்தியே மாபெரும் சக்தி என நிரூபிப்போம்.
– மருது பாண்டியன் –
பத்திரிகையாளர்