தீக்குளித்தால் தான் திமுக அரசு செவி சாய்க்குமா? | தோழர் மருது | வீடியோ

எம்.எல்.ஏ வீட்டுகளுக்கும், எம்.பி. வீடுகளுக்கும், அமைச்சர்கள் வீடுகளுக்கு நாம் குடியேறுவோம் அப்போதுதான் இந்த அரசு இறங்கி வரும். அவர் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

திராவிட மாடல், சமூக நீதி என்பது இந்த நகரத்தை உருவாக்கிய மக்களை இங்கிருந்து அப்புறப்படுத்துவதில்தான் போய் முடிகிறது. இது ஏதோ ஆர்.ஏ புரத்தில் மட்டும் கிடையாது. பெத்தேல் நகர் கொளத்தூர் என பல்வேறு இடங்களில் நடக்கிறது.
ஊமை மக்களுக்கு குரல் கொடுக்க, தன் உயிரை மாய்த்துக் கொண்ட கண்னையன் போன்ற நபர்கள்தான் உழைக்கும் மக்களுக்கு காவல் தெய்வங்களாக இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மதுரை உயர்நீதிமன்றமே நீர்நிலை ஆக்கிரமிப்பில்தான் இருக்கிறது. இங்கிருக்கக் கூடிய எம்.ஆர்.டி.எஸ் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. எல்லாவற்றையும் ஆக்கிரமிப்பு செய்துவிட்டு பணக்காரர்களும், பார்ப்பனர்களும், கோடீஸ்வரர்களும் கும்மாளம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த உழைக்கும் மக்களின் வீடுகளை இடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு பெயர் திராவிட மாடல், சமூகநீதி அரசு என்று சொன்னால் நாம் ஏற்றுக்கொண்டு போக வேண்டும். மக்களுக்கு நீதி வேண்டும் என்றால் ஒருவர் தீக்குளித்து சாகவேண்டும் என்று ஒரு கட்டாயம் இருக்கிறது. அப்போதுதான் இந்த திராவிட மாடல் அரசு, சமூக நீதிஅரசு கொஞ்சம் செவி சாய்க்கும் என்ற ஒரு மோசமான சூழல் இருக்கிறது என்று நாம் பார்க்க வேண்டும்.
எம்.எல்.ஏ வீட்டுகளுக்கும், எம்.பி. வீடுகளுக்கும், அமைச்சர்கள் வீடுகளுக்கு நாம் குடியேறுவோம் அப்போதுதான் இந்த அரசு இறங்கி வரும். கண்னையன் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கண்டனங்களை ரெட் பிக்ஸ் செய்தி ஊடகம் ஆர்.ஏ.புரத்தில் நேரடியாக சென்று எடுத்து வெளியிட்ட இந்த காணொலியில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க