கடந்த 2018, மே 22 வரலாற்றில் மறக்க முடியாத நாள். வேதாந்தா என்ற நிறுவனத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராடிய தூத்துக்குடி மக்களை ஸ்டெர்லைட்டின் அடியாளாக நின்று இந்த அரசு 15 பேரை சுட்டு படுகொலை செய்த நாள்.
கார்ப்பரேட்டுக்கு எதிராக இதுபோன்ற நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன. நமது நாட்டில் நாம் வாழுகின்ற பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தை, அரசின் படுகொலைகளை நாம் மறக்க முடியாது.
கார்ப்பரேட்டுக்கு எதிராக எப்படி போராடினால் அவனை பணிய வைக்க முடியும்? கார்ப்பரேட்டுக்கும் அரசுக்கும் உள்ள தொடர்பு என்ன? கார்ப்பரேட்டின் நலனை பாதுகாப்பதற்காகத் தான் அரசு இருக்கின்றது என்பனவற்றை தூத்துக்குடி மக்களின் வீரம்செறிந்த போராட்டம் நமக்கு உணர்த்து பாடம்.
ஆகவே, அரசு என்பது ஒரு கார்ப்பரேட் பயங்கரவாதத்தை அமல்படுத்துகின்றது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். தூத்துக்குடி போராட்டம் அதன் பிறகு நாம் கடந்து வந்த வரலாற்றையும், தற்போது தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகள் பற்றியும், ஸ்டெர்லைட் ஆலையின் சதி வேலைகளை பற்றியும், திமுக அரசின் கார்ப்பரேட் ஆதரவு செயல்பாடுகள் பற்றியும் இக்காணொளியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் நான்காம் ஆண்டு !
கார்ப்பரேட் பயங்கரவாதத்தை அமல்படுத்தும் அரசு !
காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!