தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் தியாகிகளின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு முன்பு, ஊர் மக்களை வரவிடாமல் தடுப்பது, புரட்சிகர அமைப்பினரை தடுத்து நிறுத்துவது, மக்களை ஒன்றிணையவிடாமல் செய்வது போன்ற பல்வேறு அடக்குமுறைகளை போலீசு செய்தது. அதையும் மீறி தியாகிகளின் கல்லரை வரை சென்று அஞ்சலி செலுத்தினார்கள் தூத்துக்குடி மக்கள்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில், CBI-ன் விசாரணை அறிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டமைப்பினர் அனைவரையும் சுடுகாட்டில் இருந்தே வலுக்கட்டாயமாக கைது செய்து மண்டபத்தில் அடைத்து போலீசு. கைதான மண்டபத்தில் இருந்து வெளியேறுவதற்கே கடுமையான போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

000
இந்நிகழ்வைப்போல், தமிழகம் முழுவதும் ஸ்டெர்‌‌‌லைட்டை நிரந்திர‌மாக அகற்ற தி.மு.க அரசே! சிறப்பு சட்டம் இயற்று!  தியாகிக‌‌ளுக்கு நினைவிடம் அமைத்திடு! ‌கொலைக்கார போலீஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்! போன்ற முழக்கங்களை முன்வைத்து மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பில் ஸ்டெர்லை எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு 4-ஆம் ஆண்டும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
000
விருத்தாசலம் பாலக்கரை‌யில் மக்கள் அதிகாரம் சார்பாக ‌நான்காம் ஆண்டு ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிராக போராடி உ‌யிர்நீ‌த்த தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது, ஸ்டெர்‌‌‌லைட்டை நிரந்திர‌மாக அகற்ற தி.மு.க அரசே! சிறப்பு சட்டம் இயற்று!  தியாகிக‌‌ளுக்கு நினைவிடம் அமைத்திடு! ‌கொலைக்கார போலீஸ் மீது கொலை வழக்கு பதிவு செ‌ய்! போராடும் மக்களை பிளவுப் படுத்தும் ஸ்டெர்லை‌ட்டு கைக்கூலிகள், அரசு அதிகாரிக‌ளை விரட்டிய‌டிப்போம்! உழைக்கும் மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டுவோம் ! ஸ்டெர்‌லைட் எதிர்ப்பு போராட்டத்தை பலப்படுத்துவோம்! ஆகிய கோரிக்கைகளை முன்வைத்‌து முழக்கங்கள் எழுப்பப்பட்டது..
இதில், வட்டார செயலாளர் தோழர் அசோக்குமார், மண்டல செயலாளர் தோழர் மு‌ருகானந்தம், வழக்கறிஞர் மோகன்ராஜ் மற்றும் ‌பிற தோழ‌ர்கள் கலந்து கொண்டனர்.
000
மே 22 அன்று காலை 11 மணி அளவில் திருப்பூர் நம்பியம்பாளையம். பகுதியில் தமிழக அரசே சிறப்பு சட்டம் ஏற்று நாசகார ஸ்டெர்லைட் அகற்று. தியாகிகளுக்கு நினைவு மண்டபம்  அமைத்திடு! என்ற கோரிக்கை முழக்கத்துடன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் பகுதி தோழர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தோழர் என்.பி.ஆறுமுகம், தலைவர், சமூக விடுதலை கட்சி பேசுகையில், “தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது அவிநாசி ரோடு மறைத்து ஆர்ப்பாட்டம் செய்த நிகழ்வை நினைவு கூர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடும் போராட்டத்தில் அமைப்போடும் மக்களோடும் இணைந்து செயல்படுவேன்” என்று உறுதி அளித்தார்.
தோழர் ராஜன் கோவை பகுதி செயலாளர் மக்கள் அதிகாரம் அவர்கள் பேசுகையில், “ஆலை நிர்வாகமும் அரசும் கள்ளக் கூட்டு வைத்துக் கொண்டு போராடும் மக்களை பிளவுபடுத்துகிறார்கள். நாம் அமைப்பாக இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்பதுதான் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நமக்கு கிடைத்த அனுபவம். எனவே நாம் அனைவரும் ஒன்றாக இணைந்தால் இந்த நாசகார ஸ்டெர்லைட் விரட்டி அடிக்க முடியும்” என்று சூளுரைத்தார்.
தோழர் சங்கர் கோவை மண்டல செயலாளர் மக்கள் அதிகாரம் அவர்கள் பேசுகையில், “சமீபத்தில் அரசுக்கு CBI கொடுத்த ஆலைக்கு எதிரான போராட்டத்தின் ஆய்வு அறிக்கையில், ஆலைக்கு எதிராக போராடிய மக்கள்தான் குற்றவாளிகள் என்றும் துப்பாக்கி ஏந்தி சுட்ட போலீசும், போலீசுக்கு உத்தரவிட்ட அதிகாரிகளும் குற்றவாளிகள் இல்லை என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதைக்கண்ட தூத்துக்குடி பகுதி மக்கள் அந்த நகலை கிழித்து போராடுகிறார்கள் CBI-ன் நகல் எதை காட்டுகிறது. அரசிடம் நீதியும் நியாயமும் எதிர்பார்க்க முடியாது மக்களே அதிகாரத்தை கையில் எடுத்து போராடினால் மட்டுமே நீதி பெற முடியும்” என்று சூளுரைத்தார்.
பகுதி சிறுவர்கள் இளைஞர்கள் பெரியவர்கள் ஆலையை மூடுவோம் என்று முழக்கமிட்டு இந்நிகழ்வை முடித்தனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம். 9488902202.
000
உளுந்தூர்பேட்டை மக்கள் அதிகாரம் சார்பாக பாலி மற்றும் செம்மணங்கூரில் நான்காம் ஆண்டு ஸ்‌டெர்லைட்டு ஆலைக்கு எதிராக போராடி உ‌யிர்நீ‌த்த தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஸ்டெர்‌‌‌லைட்டை நிரந்திர‌மாக அகற்ற தி.மு.க அரசே ! சிறப்பு சட்டம் இயற்று!  தியாகிக‌‌ளுக்கு நினைவிடம் அமைத்திடு ! கொலைக்கார போலீஸ் மீது கொலை வழக்கு பதிவு செ‌ய்! போராடும் மக்களை பிளவுபடுத்தும் ஸ்டெர்லை‌ட்டு கைக்கூலிகள், அரசு அதிகாரிக‌ளை விரட்டிய‌டிப்போம் ! உழைக்கும் மக்களின் ஒற்றுமையை நிலைநாட்‌டுவோம் ! ஸ்டெர்‌லைட் எதிர்ப்பு போராட்டத்தை பலப்படுத்துவோம் ! ஆகிய கோரிக்கைகளை முன்வைத்‌து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இந்நிகழ்வில் தோழர் தமிழ் அழகன் தலைமை வகித்தார் தோழர் வினாயகம் சிறப்புரையாற்றினார்.
தகவல் :
மக்கள் அதிகாரம்
உளுந்தூர்பேட்டை – 72001 12838.
000

மே 22 ஸ்டெர்லைட் போராளிகள் படுகொலை நாள், நான்காம் ஆண்டு நினைவு நாள்!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவு தினத்தையோட்டி  சென்னை சேத்துப்பட்டு பகுதியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் சார்பில்   தெருமுனை பிரச்சாரத்தை நடைப்பெற்றது. இதில் மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் அமிர்தா, பூர்ணிமா, புமா இ மு வை சேர்ந்த துணைவேந்தன், யுவராஜ், ஜனார்த்தனன் ஆகிய தோழர்கள் பேசினார்கள்.

காஞ்சிபுரம் கிளையின் சார்பாக ராணிப்பேட்டையில் புதூரில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. அதில் தோழர்கள் சரவணன். மோகன், எழில் பேசினார்கள். இதில் விசிக மற்றும் திவிக தோழர்களும் கலந்து கொண்டனர்.

தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கண்டன முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை தோழர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.

இதில் பேசிய தோழர்கள் தூத்துக்குடியில்  நான்கு  ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொடூரமான அரசு பயங்கரவாதத்தில் 15 உயிர்கள் பட்டப்பகலில் போலீஸின்  துப்பாக்கிச்சூட்டால் கொள்ளப்பட்டனர்.

அமைதியாக மனு கொடுப்பதற்காக  பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் முதியவர்கள் என 50000 க்கும் மேற்ப்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து கூடினர்.

இந்த அரசு சொல்ல கூடிய எந்த சட்ட முறைகளையும் பின்பற்றாமல் அனில் அகர்வால் என்ற கார்ப்பரேட் முதலாளியின் லாபத்திற்காக இத்தனை உயிர்களை  பலி கொடுக்கப்பட்டது.

இப்படி 15 பேர் பட்டப்பகலில் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டதை நாடே தொலைக்காட்டசியில் பார்த்தது.  இன்று சிபிஐ மூன்றாவது இறுதி அறிக்கையில் எந்தப் போலீசும் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை. போராடிய மக்கள் 101 பேர் மீதே வழக்கு போட்டுள்ளது.

மோடியின் அரசு அனில்  அகர்வால் நான்கு ஆண்டுகளாகியும் அதில் உயிர் நீ மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றவில்லை எந்த போலீசும் கைது செய்யப்படவில்லை இதை எதிர்த்து  போராடிய மக்கள் மீது

வழக்கு போட்டுள்ளது சிபிஐ. தமிழக அரசோ இதைப்பற்றி வாய் திறக்காமல் மௌனமாக இருக்கிறது. எல்லா அரசுகளும் கார்ப்பரேட் ஆதரவில் கை கோர்க்கின்றன.

இந்த அரசுகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்காக   தான் வேலை செய்கின்றன. அவர்களின்  நலனுக்கான சொந்த நாட்டு மக்களை கொலை செய்கின்றன.  தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கையை அமல்படுத்துவதில் இவர்களுக்கு யாருக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

துப்பாக்கி சூட்டில் இறந்த தன் பிள்ளைகளின் பிணத்தை வாங்காமல், ஸ்டெர்லைட்டை மூடு பிறகு வாங்கி கொள்கிறோம் என நெஞ்சுரத்தோடு நின்ற அந்த பொற்றோர்களிடமிருந்து நாம் போராட்ட குணத்தை கற்று கொள்ள வேண்டும்  என தோழர்கள் பேசினார்கள்.

நான்கு ஆண்டுகளாகியும் இந்த வழக்கில் யாரும் தண்டிக்கப்படவில்லை. அதனால் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட்டை மூட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், தியாகிகளுக்கு நினைவு தமிழக அரசு அமைக்க வேண்டும்,. கொலைகார போலீசு தண்டிக்க பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை  வலியுறுத்தி மக்கள் மத்தியில் பிரச்சாரமாக கொண்டு சென்றோம்.

செய்தி:
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்.
91768 01656.

000
இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் உட்பட்ட மேலப்புலம்புதூரில் மக்கள் அதிகாரம் மற்றும் பு.ஜ.தொ.மு, விசிக,  திராவிடர் விடுதலைக் ஆகியோர் இணைந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிப்பு தியாகிகளின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
000
மே 22 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலை நடந்து நான்காம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஆரியபட்டி கிராமம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமனின் ஊர். அங்குதான் இந்த நினைவேந்தல் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில  இணைச்செயலாளர் தோழர் குருசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் படங்களை வைத்து மாலை அணிவிக்கப்பட்டது. தோழர் ஜெயராமனின் படத்தை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், தோழர்களும் தோழர் ஜெயராமன் அவர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தோழர் ஜெயராமனின் அம்மா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். வீடுகளிலும் ஆங்காங்கு கடகடைகளிலும் நின்ற பொதுமக்கள் இந்த நிகழ்வை பார்வையிட்டனர்.
சிறப்பு சட்டம் இயற்று ஸ்டெர்லைட்டை அகற்று!  ஸ்டெர்லைடால் படுகொலை செய்யப்பட்ட  தியாகிகளுக்கு நினைவு சின்னம் அமைத்திடு! படுகொலை செய்த காவல்துறை அதிகாரிகளை கைது செய் சிறையிலடை! ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக காசு வாங்கிக்கொண்டு கைக்கூலி வேலை பார்க்கும் நபர்கள் அதிகாரிகள் ஆகியவர்களை முறியடிப்போம்! சிபிஐயின் அறிக்கை போலியானது அதை நிராகரிக்கின்றோம்! கலவரம் செய்தது காவல்துறையும் ஸ்டெர்லைடின் கைக்கூலிகளும்தான் அவர்களை கைது செய் சிறையில் அடை! போன்ற  முழக்கங்களின் அடிப்படையில் கூட்டம் நடைபெற்றது. அதில், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் உரையாற்றினார். புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக தோழர் ரவி பேசினார். மக்கள் அதிகாரம் தோழர் சிவகாமு அவர்களின் உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.

எப்படி தூத்துக்குடியில் ஒரு மணி நேரம் கூட நினைவு கூட்டம் நடத்த அனுமதி தராமல் காஷ்மீரைப் போல் இந்த திராவிட மாடல் அரசு நடந்து கொள்கிறதோ அதேபோல்தான் மதுரை திருமங்கலம் உசிலம்பட்டி பகுதிகளில் செயல்படும் தோழர்களின் வீடுகளுக்கு சென்று போலீசுத்துறை மிரட்டியது. அடிக்கடி தோழர்களின் வீடுகளில் போய் விசாரிப்பது தூத்துக்குடிக்கு தோழர்கள் போவதாக சொல்லிக் கொண்டு தொடர்ச்சியாக நச்சரிப்பது போன்ற வேலைகளை பார்த்தது போலீசு மற்றும் உளவுத்துறை.
கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தோழர்களின் பின்னால் அலைந்து திரிந்தார்கள் போலீசுத்துறை அதிகாரிகள்.
தமிழக அரசால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. தனது கழிவுகளால் ஒட்டுமொத்த தூத்துக்குடியையும் நாசம் செய்துள்ளது ஸ்டெர்லைட். இப்படிப்பட்ட ஒரு நிறுவனம் மக்கள் மத்தியில்பொய் பிரச்சாரம் செய்யவும் தனது கைக்கூலிகளை கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சில பகுதி மக்களுக்கு செய்துகொண்டு நாடகம் ஆடுவதை வேடிக்கை பார்க்கும் இந்த போலீசுத்துறைதான் மக்களையும் போராடும் அமைப்பினரையும் ஒடுக்குகிறது.
இதை எதிர்த்து முறியடிக்க ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு பலப்படுத்துவோம்! அதற்கு ஒட்டு மொத்த தமிழக மக்களும் துணை நிற்போம்!
தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
000
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தோழர் சிவா மக்கள் அதிகாரம் பென்னாகரம் வட்டார துணை செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு தியாகிகளுக்கு நினைவிடம் அமைக்க கோரியும், போலீசு மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தியாகிகளின் படங்களுக்கு தோழர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தகவல்:
மக்கள் அதிகாரம்,
பென்னாகரம்.
தருமபுரி மண்டலம்
9790138614
000
கடலூரில்….. ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம் !
000
ஸ்டெல்ரைட் எதிர்ப்பு போராட்டத்தில் வீரமரணமடைந்த 15 தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தும்விதமாக திருவாரூர் புதிய ரயில்வே நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் மற்றும் ஜனநாயக சக்திகள் மூலமாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தகவல் : மக்கள் அதிகாரம், தஞ்சை மண்டலம்.
000
சிறப்பு சட்டம் இயற்று! ஸ்டெர்லைட்டை அகற்று! என்ற முழக்கத்தின் கீழ் நான்காம் ஆண்டு  திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரம் கிராமத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் இணை செயலாளர் தோழர் கின்சன், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் பல ஆண்டுகளாக நடந்த போராட்டம். இன்று உழைக்கும் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகள் விலைவாசி உயர்வு, பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்கள் முழுவதையும் கார்ப்பரேட் கையில் கொடுப்பது, விவசாயிகள் போராட்டம் என போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ஸ்டெர்லைட் போராட்டம் என்பது மக்கள் போராட்டக்களத்தில் தான் கார்ப்பரேட்டை, ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலை வீழ்த்த முடியும் என்பதை நமக்கு உணரவைக்கிறது”.
“கார்ப்பரேட் முதலாளி வேதாந்தாவிற்கு எதிரான போராட்டத்தில், அடியாட்படை போலீசுத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்” என்று உரையாற்றினர். அதன்பின் கிராம மக்கள் தூத்துக்குடி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்-9385358605
000
புதுச்சேரி மக்கள் அதிகாரம் சார்பாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் 4-ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
000

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க