மோடிக்கு எதிரான கருத்து கொண்ட மாணவர்களை சல்லடைபோட்டு தேடும் ஐ.எஸ்.பி நிர்வாகம் !

மாணவர்களின் பட்டியலில் யாராவது மோடிக்கு எதிராக செயல்படுகிறார்களா? என்று தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ் ஆப், முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் கணக்குகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

1
பாசிஸ்டுகள் எதிர்க் கருத்துகளுக்கு அஞ்சுபவர்கள் என்பதை
ஒவ்வொரு கணமும் நிரூபிக்கிறார்கள்!
பிரதமர் நரேந்திர மோடி நாளை (மே 26) ஹைதராபாத் கச்சிபொலி பகுதியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ஐஎஸ்பி) கல்லூரியின் 20-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ள அக்கல்லூரியின் மாணவ, மாணவியர் 930 பேரின் பெயர் பட்டியல் பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், உள்ள ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் சமூக வலைத்தள பக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாணவர்களின் பட்டியலில் யாராவது மோடிக்கு எதிராக செயல்படுகிறார்களா? என்று தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ் ஆப், முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் கணக்குகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
மத்திய சிறப்பு பாதுகாப்பு பிரிவினர், அக்கல்லூரியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இவர்களது அனுமதி இன்றி யாரும் இக்கல்லூரிக்குள் செல்லவும் முடியாது. வெளியே வரவும் முடியாது.
இந்தப் பாசிச கோமாளிகள் இவ்வளவு அடக்குமுறைகளை செலுத்திதான் தங்களது கருத்தை நிலை நிறுத்திக் கொள்கின்றனர்.
சமீபத்தில் வெளிநாட்டில் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது ‘ஓமைகாட்’ என்று சொல்லி தலைதெறிக்க ஓடினார் பிரதமர் நரேந்திர மோடி 56 இன்ச் மார்பு கொண்டவர் அல்லவா!
நாடு முழுவதும் பல்வேறு கலவரங்களையும் திட்டமிட்டு நடத்திவரும் காவிக் கும்பல் மாணவர்களை கல்வியில் இருந்தே வெளியேற்றும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி வருகிறார்கள். கல்விக் கட்டணங்களை பலமடங்கு உயர்த்தி வருகிறார்கள். அப்படியானால் மாணவர்களுக்கு எதிராக செயல்படும் இந்த கும்பல் மாணவர்களை கண்டால் அச்சப்படத் தானே செய்வார்கள்.
படிக்க :
♦ இந்தோ-பசுபிக் பொருளாதார கூட்டமைப்பு : சீனாவிற்கு எதிராக அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வு !
♦ சுடுகாட்டு ஜனநாயகம்! உறுதியாய் நின்ற மக்கள்! மக்களிடம் கற்போம்! ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடி நீதி பெறுவோம்!
இதுபோக, CAA, NPR, NRC எதிர்ப்புப் போராட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்காக களத்தில் முன்னணியில் நின்றது, பல்வேறு உயர் கல்வி படிக்க கூடிய பல்கலைக்கழக மாணவர்கள்தான். இன்னும் இதுபோல, நீட் பிரச்சினையில் களத்தில் நின்றவர்கள் மாணவர்கள். இப்படி மக்களை பாதிக்கக் கூடிய பல்வேறு பிரச்சினைகளில் களத்தில் நிற்கக் கூடியவர்கள் மாணவர்கள்.
இது ஒருபக்கம் மாணவர்கள், இளைஞர்களிடம் உள்ள முற்போக்கான அம்சம் என்றாலும் இன்னொரு பக்கம் ஒட்டுமொத்த மாணவர்களையும் காவிமயப்படுத்த துடிக்கிறது இந்த காவிக்கும்பல்.
அதற்காக பள்ளிகளில் முதல் கல்லூரி வரை என எங்கும் ஜனநாயக ரீதியான கருத்துக்களை அழித்துவிட்டு பாசிச கருத்துக்களை கொண்ட பிற்போக்கு குப்பைகளையும், காவிக் கும்பலின் தலைவர்களையும் பாடத்திட்டத்தில் சேர்த்து வருகிறார்கள். இருக்கக் கூடிய எல்லா பல்கலைக்கழகங்களிலும் தங்களது காவிக் கும்பலை உருவாக்க நினைக்கிறார்கள்.
அதற்கு பலியானவர்கள் பிற்போக்கு குப்பையான சரக சப்த் உறுதிமொழியை மதுரை மருத்துவக் கல்லூரியில் வாசித்தார்கள். ஜனநாயக ரீதியான கருத்து கொண்ட பேராசிரியர்கள் தங்கள் கல்லூரிகளிலும் பல்கலைக்கங்களிலும் பேசக் கூட அனுமதிப்பதில்லை.
சமீபத்தில் உத்தரப்பிரதேச பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவாபி பிரச்சினையை பற்றி கருத்து சொன்னார் என்பதற்காக அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது காவி கும்பலைச் சேர்ந்த மாணவர்கள்.
ஒரு பக்கம் மாணவர்களை தனது காவி பாசிச போதையேற்றும் அதேசமயம், ஒட்டு மொத்த மாணவர் இளைஞர்களையும் கல்வியில் இருந்தும், வேலையில் இருந்தும் துரத்தியடித்து நாட்டையே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூட்டி கொடுத்து வருகிறார்கள். இதற்காகத்தான் இன்று மிகவும் எச்சரிக்கையாக மாணவர்களை சோதிப்பது என்ற பெயரில் அடக்குமுறையை ஏவுகிறார்கள்.
மாணவர்கள் – இளைஞர்களின் சிந்தனையை மடைமாற்றியும், அவர்களின் மீதும் அடக்குமுறைகளை ஏவும் இந்த காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலை எதிர்த்து முறியடிப்பதே நம் (மாணவர்கள், இளைஞரகள்) முன் இருக்கும் ஒரே தீர்வாக இருக்க முடியும்.

ரவி