குற்றவாளிகளின் கூடாரம்தான் பாஜக : காவி பாசிஸ்டுகளை விரட்டியடிப்போம் ! | வீடியோ

“Go Back Modi” என்று கூறுவதோடு மட்டும் நிற்காமல், இந்த காவி - கார்ப்பரேட் பாசிஸ்டுகளை நாட்டைவிட்டே விரட்டியடிக்க வேண்டியது அவசியம்.

முத்துப்பேட்டையில் அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய பாஜக பிரமுகர் கைது என்று மே 22-ம் தேதி தமிழக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது. பெட்டோல் குண்டு வீசிய கிருமினல் இவர்களுக்கு பிரமுகராம். பாஜகவின் வரலாற்றை சற்று பார்ப்போம்.
பஞ்சாமிருத டப்பாகுள் கஞ்சா விற்றவன், நான் பாஜக கட்சியை சார்ந்தவன்தான் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டான். ரவுடி சூரியா என்பவன் பாஜக கட்சியில் சேரும்போது போலீசிடமிருந்து தப்பிப்பதற்காக கே.டி.ராகவன் காரில் ஏறி தப்பித்து ஓடினான். இதேபோல் பிரபல ரவுடி கல்வெட்டு ரவி என்பவன் பாஜகவில் சேர்ந்திருக்கிறான். இப்படி இவர்களின் வரலாற்றை நாம் தோண்டிக்கொண்டே போனோம் என்றால் முழுக்க முழுக்க கிருமினல் கும்பலைத்தான் கட்சியில் சேர்த்து வைத்திருக்கிறார்கள். இதை பற்றி முன்னால் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனிடன் ஓர் பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு “நாங்கள் பின்புலம் எல்லாம் பார்க்க மாட்டோம் யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக்கொள்ளுவோம்” என்று கூறியுள்ளார்.
எனவே ரவுடிகள், கிருமினல்களின் கூடாரமான பாஜகவை, “Go Back Modi” என்று கூறுவதோடு மட்டும் நிற்காமல், இந்த காவி – கார்ப்பரேட் பாசிஸ்டுகளை நாட்டை விரட்டியடிக்க வேண்டியது அவசியம். இது போன்ற பல்வேறு விளக்கங்களை இந்த காணொலியில் பதிவு செய்கிறார் புமாஇமுவின் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் ரவி.

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க