தனியார் கல்விக்கு எதிராக கள்ளக்குறிச்சி மக்கள் போராட்டம் : கேள்விகளும் பதில்களும் | மருது வீடியோ

கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை ஆதன் தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த இப்பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்.

கள்ளக்குறிச்சியில் உள்ள கொலைகார சக்தி பள்ளி தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். பொதுவாக இதுபோன்ற தனியார் பள்ளிகள் போலீசுடன் கூட்டில் இருக்கும்; ஏதேனும் பிரச்சினை வந்தால் போலீசு வெளியே தெரியாமல் சரிசெய்து முடிக்கும்.

உதாரணமாக, ஜேப்பிஆர் கல்லூரியில் ஒரு மாணவி இறந்துவிடுகிறார். ஆனால், அவருக்கு உடம்பு சரியில்லை என்று முதலில் கூறுகிறார்கள். பிறகு மிகவும் சீரியஸ் ஆக இருக்கிறார் எனகிறார்கள். அதன் பிறகு சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் இறந்துவிட்டார் என்கிறார்கள். நியாயப்படி செங்கல்பட்டு மருத்துவமனைக்குதான் அழைத்து சென்றிருக்க வேண்டும். இதில், செங்கல்பட்டு எடுத்து சென்றால் சட்டம்&ஒழுங்கு பிரச்சினை வரும்; எனவே நீங்கள் அந்த மாணவியை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்புங்கள்; உறவினர்கள் வர தாமதம் ஆகும் என்று போலீசு ஐடியா கொடுக்கிறது.

அதைப்போலத்தான், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஜூலை 13-ஆம் தேதி இறந்து போகிறார். இறந்த மாணவி உடலை தாய் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இங்கிருந்துதான் மரணம் சந்தேக மரணமாக மாறுகிறது.

அடுத்து இந்த மரணத்தில் போலீசின் அணுகுமுறை. கள்ளக்குறிச்சியில் வன்முறை நடந்து கொண்டிருக்கும்போது டிஜிபி பேசுகிறார்; உடனே அனைவரும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் வீடியோவை வைத்து அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்போம் என்கிறார். பள்ளி நிர்வாகத்தில் கைது செய்தீர்களா? என்று கேட்கும்போது ஆசிரியர் பெருமக்களை கைது செய்ய முடியாது என்கிறார். இதை சொன்ன எட்டுமணிநேரத்திற்கு பிறகு மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்படுகிறார்கள். எப்படி இப்போது மட்டும் கைது செய்யமுடிந்தது. எனவே இங்கு பிரச்சினை என்ன… மாணவின் தாய் இவர்கள் மீதுதான் சந்தேகம் என்று கூறும்போது, சம்மந்தபட்ட ஆசிரியர்களை கைது செய்து எஃப்.ஐ.ஆர் போட்டிருந்தால் இந்த வன்முறை ஏன் நடந்திருக்கிறது என்பதை பற்றி பேசலாம்.

அப்போ மீண்டும் மீண்டும் எப்படி அந்த பள்ளி நிர்வாகம் மரணத்தை மூடி மறைந்ததோ, அதைபோலவே இந்த போலீசும் – மாவட்ட நிர்வாகமும் பள்ளிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதன் விளைவாகத்தான் மக்களுக்கு கோவம் வருகிறது.

ஏனெனில், மூன்று நாள் மக்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். இறந்த மாணவியின் அம்மாவும் அமைதியாகத்தான் அழுத்துகொண்டிருக்கிறார். ஆனால் மூன்று நாட்களுக்கு பிறகு, என் மகள் இறந்துவிட்டார்; இந்த பள்ளியில் ஏற்கனவே ஏழு பேர் இறந்துள்ளார்கள்; இங்கு அநியாயம் நடக்கிறது, அக்கிரமம் நடக்கிறது என்று ஏன் தாய் கதறி அழுகிறார். நீதி கேட்க ஆள் இல்லை. தட்டிக்கேட்க ஆள் இல்லை என்பதற்காகத்தான். அனைத்து கட்சிகளும் போய் ஆறுதல் தெரிவிக்கிறார்கள் ஆனால் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

அவர்கள் கேட்பது ஓர் சாதாரண கோரிக்கை! சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும். இதை தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. இதை ஏன் செய்ய மறுக்கிறார்.

கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை ஆதன் தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த இப்பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

#justiceforsrimathi #Kallakurichi #KallakurichiStudentDeath #Srimathi

1 மறுமொழி

  1. கொலைகார தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக போலீசு – அரசு எந்திரம் ஆகியவை நேரடியாக செயல்படுகிறது. உழைக்கும் மக்களின் நீதிக்காக யாரும் இல்லையே…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க