உ.பி: பள்ளி சிறுமிகள் மீது சாதிய ஒடுக்குமுறை !

ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் தன் கல்வி பயில்விக்கும் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை பற்றி எந்த ஒரு அறிவும் இல்லாமல் இருப்பது என்பது இவர்களின் மெத்தன மற்றும் அதிகாரப் போக்கை புலப்படுத்துகிறது.

0

ஜூலை 11, உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹபுரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், புகைப்படம் எடுப்பதற்காக பள்ளி சீருடை மாணவர்களை பள்ளிக்கு வர ஆசிரியர்கள் சொல்லி இருந்தனர். அப்போது, இரண்டு மாணவிகள் சாதாரண உடையில் வந்திருந்தனர். இந்த இரண்டு மாணவிகளுக்கு சீருடை கழற்றித் தருமாறு பட்டியல் இன மாணவிகளை வற்புறுத்தியதாக அந்த மாணவிகளின் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் இவர்களின் சாதியை காரணம்காட்டி அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டியதாகவும், அந்த இரண்டு மாணவிகளின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். எனது மகளின் சீருடை கழற்றி வேறொரு சிறுமியிடம் கொடுக்கும்படி கேட்டதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர்களை அடித்து வற்புறுத்தி சீருடை கழற்ற செய்ததாகவும் சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதை குறித்து அந்த சிறுமியின் பெற்றோர்கள் பள்ளியில் புகார் அளித்தபோது இந்த பிரச்சினை குறித்த சரியான பதிலையும் அவர்கள் அளிக்கவில்லை.

மற்றொரு சிறுமியின் தந்தை, சாதிய எதிர்ப்பு அமைப்பான ஷோவில் கிராந்தி தால்-யிடம் இந்த விஷயத்தை எடுத்துச் சென்று, ‌அதன் தலைவர் ஹாபூரின் அடிப்படை ஷிக் ஷா அதிகாரியிடம் பிரச்சினையை எழுப்பினார்.

“இரண்டு சிறுமிகள் பட்டியல் சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு எதிராக ஆசிரியர்கள் வேணும் என்று செய்த நடவடிக்கை இது. அந்த சிறுமியின் தந்தை என்னை அனுப்பியபோது நான் போலீசுத்துறையிடம் விஷயத்தை எடுத்துச் சென்றேன் மேலும் ஆசிரியர்களின் இடைநீக்கம் செய்யுமாறும் கேட்டுக் கொண்டேன்” என்று ரவிகாந்த் கூறியதாக செய்தியாளர்கள் கூறினார்.


படிக்க : முஸ்லீம் மக்களை ஒடுக்கும் உ.பி காவி போலீசுப்படை!


ஆனால், அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மாணவர்கள் முழு பள்ளி சீருடையில் பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், சீருடை அணியாத சில மாணவர்கள் தங்கள் சக மாணவர்களிடம் புகைப்படத்திற்காக சீருடை கடனாக கேட்டதாகவும், இதுபோன்ற ஒரு சம்பவம் பள்ளியில் நடந்து தனக்கு தெரியாது என்றும், சிறுமிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து எங்களை விசாரிக்க தொடங்கியபோதுதான் இந்த நிகழ்வை அறிந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் தன் கல்வி பயில்விக்கும் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை பற்றி எந்த ஒரு அறிவும் இல்லாமல் இருப்பது என்பது இவர்களின் மெத்தன மற்றும் அதிகாரப் போக்கை புலப்படுத்துகிறது.

இடைநிறுத்தப்பட்ட நிலையிலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து செல்வதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர். இதற்கு, “ஆசிரியர் பொறுப்பில் இருந்து இடைநிறுத்தப்பட்டாலும் பள்ளியின் சாவியானது பொறுப்பாளர் கையில் இருப்பதால் பள்ளிக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்” என்று ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் – அமைதியை கெடுக்கும் வகையில் மனமும் வந்து புண்படுத்துதல் மற்றும் அவமானப்படுத்துதல் உட்பட – எஸ்சி/எஸ்டி (தடுப்பு) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையானது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கு அரசும் சரி, அரசாங்கமும் சரி ஆளும் வர்க்கங்களுக்கானதுதான் என்பதை ஒவ்வொரு நிகழ்விலும் புலப்படுத்தி வருகிறது. தற்போது கள்ளக்குறிச்சியில் நடந்த தனியார் கல்விக்கு எதிராக போராடிய மக்கள் மீது பல வழக்குகளை தொடுத்தும், அவர்களின் போராட்டத்தை ஒடுக்கியும், நாங்கள் ஆளும் வர்க்கத்திற்கான அரசுதான் என்பதை சொல்லாமல் சொல்லுகிறது.

எனவே, மக்களாகிய நாம் அணிதிரண்டு போராட்டக்களத்தை நோக்கி செல்வதின் மூலம்தான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமே தவிர, சட்டங்களின் மூலம் அல்ல.


தேன்மொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க