கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி: நீதிமன்றத்தினால் மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்காது! | மருது வீடியோ

மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாகவும், போராடிய மக்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்பாகவும், கொலைகார சக்தி தனியார் பள்ளியை பாதுகாக்க அரசின் செயல்பாடுகள் குறித்தும் தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விரிவாக விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...

ள்ளக்குறிச்சி மக்களின் போராட்டத்தின் போது, டி.ஜி.பி பள்ளியின் மீது எவ்வித குற்றமுமில்லை என்று நேரலையில் கூறுகிறார். ஆசிரியர் பெருமக்களை எடுத்தவுடன் கைது செய்யமுடியாது என்று கூறினார். கள்ளக்குறிச்சிக்கு சென்றார். போராட்டம் செய்பவர்களை உடனே சென்று விடுங்கள் என்று மிரட்டினார். ஆனால் எப்படி பள்ளியின் குற்றவாளிகள் 5 பேரை கைது செய்தார்கள். அப்போது இவர்களின் நோக்கம் என்ன?

திமுகவின் பிரச்சினை என்ன? கொங்கு வேள்ளாளக் கவுண்டர்களை கைது செய்தால், அவர்களின் ஓட்டு நமக்கு போய்விடும் என்று பார்க்கிறார்கள். 9987 தனியார் பள்ளிகள் இருக்கிறது. அவை அரசை மிரட்டிக் கொண்டிருக்கிறது. நந்தக்குமார் ஒரு ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட நபர். தனியார் பள்ளிகளின் சாக நடத்துகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. எதையும் யாரும் தட்டிக்கேட்க முடியவில்லை; மாற்ற முடியவில்லை. இதில் இருந்து மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்குமா? கிடைக்காதா? என்பதை பற்றி நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

தேடி தேடி மாணவர்களையும் இளைஞர்களையும் கைது செய்கிறீர்கள் அல்லவா! அப்படி தேடி தேடி எத்தனை பி.ஜே.பி காரர்களை ஆர்.எஸ்.எஸ் காரர்களை கைது செய்தீர்கள். பட்டியல் காட்டுங்கள்!

இந்த பிரச்சினைக்கும் எச்.ராஜாவிற்கும் என்ன தொடர்பு என்று பதில் சொல்லுங்கள்! நடக்காத ஒரு விஷயத்தை – மாட்டு மடியை வெட்டிக்கொண்டு போனார்கள் என்று சொன்னார் அல்லவா! அதை பற்றி ஏன் விசாரணை செய்யவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை பற்றி சொல்கிறார்களே ஏன் விசாரணை செய்யவில்லை. யார் யார் போராட்டத்திற்கு வந்தார்களோ, யார் யார் கையில் சிக்கினார்களோ அனைவரையும் கைது பன்னீர்கள் அல்லவா, ரவி குமாரை விசாரியுங்கள் அவர் போனீன் ஒருவார காலம் யாரிடமெல்லாம் பேசினார் என்று ஆய்வு செய்து அவர்களை அழைத்து விசாரிக்கலாம் அல்லவா? ஏன் விசாரிக்கவில்லை. எனவே இவர்களின் நோக்கம்தான் என்ன?

இந்த கொலைகார சக்தி பள்ளியை பாதுகாப்பதன் மூலமாக, தனியார் பள்ளி முதலாளிகளின் இலாபிக்கு தமிழக அரசு பணிந்து போய்விட்டது! பயந்து போய் விட்டது! இனி இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது.

மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாகவும், போராடிய மக்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்பாகவும், கொலைகார சக்தி தனியார் பள்ளியை பாதுகாக்க அரசின் செயல்பாடுகள் குறித்தும் தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விரிவாக விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க