மாணவியின் இடுப்பெலும்பு உடைக்கப்பட்டது என்பது முதல் முதல் உடல்கூறு ஆய்வில் தெரியாதா? இரண்டாவது உடல்கூறு ஆய்வில் தான் தெரிகிறது என்றால், ஆதாரங்களை மூடி மறைக்கப் பார்த்திருக்கிறார்கள்!
உண்மையிலேயே மாணவியின் மரணம் தற்கொலைதான் என்றால் ஏன் நீங்கள் இவற்றையெல்லாம் செய்கிறீர்கள். இவர்கள் எல்லாம் சாதாரண குற்றவாளிகள் அல்ல; இவர்கள் வெளியே வந்தார்கள் என்றால் 100 சதவீதம் ஆதாரங்களை அழித்து விடுவார்கள். குற்றவாளிகளுக்கு கிடைத்திருக்கும் ஜாமீன் என்பது இவ்வழக்கில் உண்மையான நீதி கிடைக்காது என்பதையே நமக்கு உணர்த்துகிறது.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தமிழ்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்…
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!