அதிகரித்துவரும் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் மீதான காவி குண்டர்களின் தாக்குதல்கள்!

கடந்த 2021 ஜனவரி முதல் 2021 டிசம்பர் வரை கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிராக 505 தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், 2022-ல் இத்தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

0

ரு அரசு சாரா நிறுவனத்தின் உதவி எண் மூலம் பெறப்பட்ட அழைப்புகள் அடிப்பதையில் இந்த ஆண்டு ஜூலை வரை கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்தல் 300-க்கும் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 28 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ஹர்சந்த்பூர் என்ற கிராமத்தில் மூன்று நபர்கள் (ராம்வதி, தஷ்ரத் மற்றும் ரகுவீர்) கிராம மக்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ய முயன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டனர். இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பிரிவு 3 மற்றும் 5 (1) பிரிவு 295A கீழ் போலீசு அவர்கள் மூவர்மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

“இந்துத்துவ குண்டர்கள் நாங்கள் மதமாற்றம் செய்வதாக கூறி எங்கள் தேவாலயத்தில் திரண்டனர். எங்கள் மீது போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் எங்களை கொடூரமாக தாக்கினர்” என்று மூவரும் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் மூவரும் சிறு விவசாயிகள் மற்றும் விவசாயக்கூலிகள் ஆவர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 31 அன்று மூவரும் ஜாமீன் பெற்றனர். அவர்கள் கட்டாய மதமாற்ற முயற்சி செய்தார்களா என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக அவர்களின் வழக்கறிஞர் சிவ குமார் கூறுகிறார்.

“நாங்கள் தாக்கப்பட்டோம். எங்களைக் காவலில் வைக்கும்போது இந்துத்துவ குண்டர்களால் என் கை முறுக்கப்பட்டது. தஷ்ரத் மற்றும் ரகுவீர் ஆகியோரும் கொடூரமாக தாக்குதலுக்குள்ளானர்கள். நாங்கள் மக்களை மதமாற்றுகிறோம் என்று அவர்கள் குற்றம் சுமத்தினார்கள்” என்று ராம்வதி கூறினார்.

000

ஆகஸ்ட் 31 அன்று, பஞ்சாபின் டார்ன் தரனில் முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட குழு தேவாலயத்திற்குள் நுழைந்து, பீட்டா சிலையை சேதப்படுத்தியது; தேவாலயத்திற்கு சொந்தமான காரை தீ வைத்து கொளுத்தியது. இன்ஃபண்ட் ஜீசஸ் கத்தோலிக்க தேவாலயத்தின் பாதிரியாரான தாமஸ் பூச்சலில், பாதுகாப்புப் படையினரை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறினார்.

United Christian Forum கருத்துப்படி, 2022 முதல் ஏழு மாதங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 302 தாக்குதல்கள் நடந்துள்ளன. இதற்கான தரவுகள் உதவிமைய எண்ணின் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளது.

UCF ஒரு அரசு சாரா அமைப்பு. அதன் உதவிமையம் 1-800-208-4545 ஜனவரி 19, 2015 அன்று தொடங்கப்பட்டது. சட்டத்தைப் பற்றி அறியாதவர்கள் உதவி மற்றும் சட்டப்பூர்வ தீர்வுக்காக அணுகலாம். இது டெல்லியை தளமாகக் கொண்ட அமைப்பு.  இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை மாநிலங்கள் முழுவதும் உள்ள வழக்குகளை ஆவணப்படித்து, அதன் தரவுகளை தி வயர் செய்தி ஊடகத்திற்கு அனுப்பியுள்ளது. UCF இன் தரவு, உத்தரப்பிரதேச மாநிலத்தில் 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தில் 60 வழக்குகள் பதிவாகியுள்ளன.

பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ, National Solidarity Forum மற்றும் Evangelical Fellowship of India சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

கிறிஸ்துவ சமூகத்திற்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளைப் பேசிய இந்துத்துவக்குழுக்களுக்கு எதிராகவும், தேவாலையங்கள், பிராத்தனைக் கூடங்கள், வழிபாட்டு தலங்களை சேதப்படுத்திய – பிராத்தனைக்கு இடையூறு செய்ய குழுக்களுக்கு எதிராகவும் உடனடியான நடவடிக்கைகளை எடுக்க அரசு தவறிவிட்டது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஜனவரி முதல் 2021 டிசம்பர் வரை கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிராக 505 தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், 2022-ல் இத்தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

000

நாடுமுழுவது கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிராக இந்துத்துவ குண்டர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்துராஷ்டிர கனவு இந்தியாவில் மற்ற சிறுபான்மை மதத்தினருக்கு  இடமில்லை என்ற பாசிச இந்துமதவெறியை தொடர்ந்து விதைத்து வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சங் பரிவாரங்கள். காவி குண்டர்களை ஆயுதப்பயிற்சிக்கொடுத்து சிறுபான்மை மக்களை ஒடுக்குவதற்காகவே ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்கி வருகிறது. அனைத்து உழைக்கும் மக்களும் இந்த காவிக்குண்டர்களுக்கு எதிராக படையாக திரண்டு எதிர்க்கவில்லை என்றால், இந்த தக்குதல்களையும், காவி-கார்ப்பரேட் பாசிச சக்திகளையும் ஒருபோது முறியடிக்க முடியாது.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க