தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி | தோழர் அமிர்தா வீடியோ

தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி.யையும், கார்ப்பரேட் நல திமுக அரசையும் தமிழ்க்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்....

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் கருத்துக்கள் வெறும் இந்துராஷ்டிரத்தை அமைப்பது மட்டுமல்ல… கார்ப்பரேட் நலன்களும் அதனுள் அடங்கி இருக்கிறது. தொழிலாளர் உரிமைக்காக போராடினால் அவர்களை ஒடுக்குகிறார்கள். குஜராத்தில் முதலாளிகள் தொழிற்சாலைகளை தொடங்கலாம் ஏன் என்றால் அங்கு தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை தொடங்க முடியாது என கட்டுப்பாடு போட்டுள்ளார்கள். தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்பட்டு 44 சட்டங்கள் 4 தொகுப்புகளாக குறைக்கப்படுகிறது. இந்த 44 சட்டங்கள் என்பது பல்வேறு ஆண்டுகளில் போராட்டம் நடத்தியதன் மூலமாக தொழிலாளர்கள் பெற்ற உரிமைகள் அது.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் நோக்கம் மக்களுக்கு அறியப்பட்ட பிரபலமானவர்களை தனக்கானவர்கள் என்று மாற்ற முயற்சிக்கிறது. குறிப்பாக இளையராஜா போன்றவர்களை பதவி கொடுப்பதன் மூலமாகவோ, ஏதோ ஒரு வகையிலோ அவர்களை தன்வயப்படுத்தி கொள்வதன் மூலம் ஆட்சியதிகாரத்தை பிடிக்க முயல்கிறது சங் பரிவாரம்.

தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யையும், கார்ப்பரேட் நல திமுக அரசையும் தமிழ்க்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்….

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க