நவம்பர் 28: பிரெடெரிக் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! | வீடியோ

தோழர் எங்கல்ஸ்-இன் 203வது பிறந்த தினம் இன்று. நாம் பல்வேறு காரணங்களுக்காக எங்கெல்ஸை நினைவுகூர கடமைப்பட்டிருக்கிறோம். மார்க்சியத்தை விஞ்ஞானபூர்வமான இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் உருவாக்கியவர்கள் தோழர் மார்க்சும் எங்கெல்சும்.

தோழர் எங்கல்ஸ்-இன் 203வது பிறந்த தினம் இன்று. நாம் பல்வேறு காரணங்களுக்காக எங்கெல்ஸை நினைவுகூர கடமைப்பட்டிருக்கிறோம். மார்க்சியத்தை விஞ்ஞானபூர்வமான இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் உருவாக்கியவர்கள் தோழர் மார்க்சும் எங்கெல்சும். அப்படி உருவாக்கியதால்தான், இன்று வரை, எந்த முதலாளித்துவ பொருளாதார அறிஞராலும் தத்துவவாதியாலும் மார்க்சிய தத்துவத்தை தொட்டு கூட பார்க்க முடியவில்லை.

மார்க்சுடன் இணைந்து மார்க்சியத்தை நிறுவியதிலும், இயற்கையை இயக்கவியல் பொருள் முதல்வாத அடிப்படையில் ஆராய்ந்ததிலும், மார்க்சுக்கு பின்னர் தனது இறுதி காலம் வரை மார்க்சியத்தை செழுமைப்படுத்தியதிலும் எங்கெல்சின் பங்கு அளவிடற்கரியது. மார்க்சின் பங்களிப்பு என்று கூறும்போதே அதில் எங்கெல்சின் பங்களிப்பும் உடன் கலந்திருக்கிறது. அந்த இரட்டையர்கள் பாட்டாளி வர்க்கத்துக்கு அளித்த கொடை தான் மார்க்சியம்!

நவம்பர் 28, 2022 பிரெடெரிக் எங்கெல்ஸின் 203-வது பிறந்த நாளில் அவரது நினைவை நெஞ்சிலேந்துவோம்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க