மனித கழிவுகளை மனிதனே அள்ளும் சாதியக்கொடுமை காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. இந்த நவீன காலத்திலும் பல்வேறு தூமைப்பணியாளர்கள் – கழிவுஅகற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பில்லாத காரணத்தினாலும், விஷவாயு தாக்கியதாலும் இறந்திருக்கிறார்கள். அவர்களின் உயிருக்கே பாதுக்கப்பில்லாத இந்த வேலையில் கூட அவர்களுக்கு மிகவும் சொற்பமான சம்பளமே வழங்கப்படுகிறது. இதுபோன்று சமூக அவலங்களை பற்றி கூறும் படங்கள் சமகாலங்களில் வருகின்றன. படம் வந்ததும் பேசு பொருள் ஆகிறது. அதையும் தாண்டி அந்த அவலங்களுக்கு எதிரான போராட்டங்கள் சமூகத்தில் அதிகரிக்க வேண்டியது அவசியம்.
மலக்குழி மரணம் தொடர்பாக தற்போது வெளியாகி இருக்கும் விட்னஸ் திரைப்படத்தை பற்றிய திரை விமர்சனத்தை இக்காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்…
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!