இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகள் தினம் – ஆளுநர் ரவியே வெளியேறு சென்னையில் ஆர்ப்பாட்டம்!

இன்று (25.01.23) காலை 11 மணி அளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தின் முன்பு கெட் அவுட் ஆளுநர் ரவி (#GetOutRavi) என்ற முழக்கமிட்டு, என்ற முழக்கம் எழுதிய அஞ்சல் அட்டைகளை ஆளுநர் மாளிகைக்கு  தபால் செய்தோம்.

ந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகளை உயர்த்தி பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! என்ற தலைப்பில் ஜனவரி 25 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொமு, மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக தெருமுனை கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டம் என்ற வகையில் மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், ஆளுநர் ரவியே வெளியேடு என்ற முழக்கத்தை முன் வைத்தும் போராட்டங்கள் இன்று நடைப்பெற்றன.

இன்று (25.01.23) காலை 11 மணி அளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தின் முன்பு கெட் அவுட் ஆளுநர் ரவி (#GetOutRavi) என்ற முழக்கமிட்டு, என்ற முழக்கம் எழுதிய அஞ்சல் அட்டைகளை ஆளுநர் மாளிகைக்கு  தபால் செய்தோம்.

அங்கு தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தக்கூடிய, தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் பாசிச ஆளுநர், ஆர்.எஸ்.எஸ் ரவியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினோம்.

பின்பு இருசக்கர வாகனத்தில் கையில் செங்கொடி ஏந்தியபடி சென்னை மூலக்கொத்தலத்தில் உள்ள இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் நினைவிடத்திற்கு சென்னை மக்கள் அதிகாரம், பு.மா.இ.மு தோழர்கள் சென்றோம்.

நினைவு மண்டபத்தை நோக்கி செல்லும்போது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிப்போம். மொழிபோர் தியாகிகளுக்கு வீரவணக்கம் என முழக்கமிட்டுக் கொண்டே சென்றோம்.

அங்கு தியாகிகள் நினைவு மண்டபத்தில் மாலை அணிவித்தும், வீர வணக்கமும் செலுத்தப்பட்டது.

தகவல்:
புமா.இ.மு, தமிழ்நாடு.
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க