சீமானை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்!

“ஈரோட்டில் அருந்ததியர் மக்களை வந்தேறிகள் என வன்மத்தைக் கக்கிய சீமானை குண்டர் சட்டத்தில் கைதுசெய்! நாம் தமிழர் கட்சியைத் தடை செய்!” என்னும் முழக்கத்தை முன்வைத்து 22/02/23 அன்று புரட்சிகர அமைப்புகள் ஜனநாயக சக்திகள் சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

துரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில், “ஈரோட்டில் அருந்ததியர் மக்களை வந்தேறிகள் என வன்மத்தைக் கக்கிய சீமானை குண்டர் சட்டத்தில் கைதுசெய்! நாம் தமிழர் கட்சியைத் தடை செய்!” என்னும் முழக்கத்தை முன்வைத்து 22/02/23 அன்று மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் மற்றும் ஜனநாயக சக்திகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தோழர்கள் மாற்றுக் கட்சி அரசியல் இயக்கத் தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, சீமான் போன்றவர்கள் உழைக்கும் மக்களைச் சாதி ரீதியாகப் பிளவுபடுத்தி அதன் மூலம் ஓட்டு வங்கியை உருவாக்குவதற்கான அயோக்கியத்தனமான வேலையைச் செய்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தினர்.

சீமானிற்கு ஆரியப் பார்ப்பனர்களை வந்தேறிகள் என்று சொல்லத் துணிச்சல் இருக்கிறதா?. தமிழ்நாட்டில் கனிம வளங்களைச் சூறையாடுவது, தொழிலாளர்கள் உழைப்பைச் சுரண்டுவது மட்டுமல்லாமல் நாட்டையே பொருளாதார சிக்கலில் மூழ்கடித்து வரும் கயவர்களான வேதாந்தா, அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகள் வந்தேறிகள் தான். அவர்கள் தமிழர்கள் அல்ல. அவர்களை அடித்து விரட்டத் துணிவு இல்லாத இந்த சீமான் தான் உழைப்பையே நம்பி உயிர்வாழும் மக்களை வந்தேறிகள் என நாக்கூசாமல் பேசுகிறார் என்பதை எடுத்துரைத்தனர்.

மேலும் உழைக்கும் மக்களின் மத்தியில் வெறுப்பு அரசியலைக் கக்கும் காவிக் கும்பலுக்கும் அதற்கு வால் பிடிக்கும் பிழைப்புவாத சீமான் போன்ற ஓட்டுக்கட்சி ஓநாய்களுக்கும் செல்லும் இடமெல்லாம் செருப்படி விழும் என்று எச்சரிக்கும் விதமாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தகவல்: ம.க.இ.க, தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க