மதுரை: மே 1 மாநாடு சுவர் விளம்பரங்களை அழித்த போலீசு மீது நடவடிக்கை எடுத்திடுக! | ம.க.இ.க மனு

மதுரை: மே 1 மாநாடு சுவர் விளம்பரங்களை அழித்த போலீசு மீது நடவடிக்கை எடுத்திடுக! மக்கள் கலை இயக்கியக் கழகம் சார்பில் மதுரை மாநகர போலீசில் மனு மனு அளிக்கப்பட்டது.

மதுரை: மே 1 மாநாடு சுவர் விளம்பரங்களை அழித்த போலீசு மீது நடவடிக்கை எடுத்திடுக!
மக்கள் கலை இயக்கியக் கழகம் போலீசில் மனு!

20.03.2023

அனுப்புநர்:
ப.ராமலிங்கம், S/O பவுன்ராஜ்
34, மகாலிங்கம் சாலை,
வில்லாபுரம், மதுரை-12

பெறுநர்:
காவல் ஆணையாளர்,
மதுரை மாநகரம்.

திப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, மதுரையில் வரும் மே 1 சர்வதேச தொழிலாளர் தினத்தன்று ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! சுற்றி வளைக்குது பாசிசபடை!   “வீழாது தமிழ்நாடு! துவளாவது போராடு!” என்ற தலைப்பின் அடிப்படையில் மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அதன் அடிப்படையில் பிரச்சார வடிவங்களாக மக்கள் மத்தியில் சுவர் எழுத்துக்கள், நோட்டீஸ் என பல்வேறு கட்சிகள் இயக்கங்கள் செய்வதைபோல், நாங்களும் பிரச்சாரம் செய்து வருகிறோம்.

யாரிடமும் வன்முறையை தூண்டும் விதமாகவோ, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவோ, தனி நபர்களை தாக்கும் விதமாகவோ இல்லாமல், நமது தமிழக முன்னோர்கள் வள்ளுவர், வள்ளலார், சித்தர்கள் என பார்ப்பனிய எதிர்ப்பு மரபையும், வேலுநாச்சியார், சின்ன மருது, பெரிய மருது, தீரன் சின்னமலை, புலி தேவன், ஒண்டிவீரன், சிங்காரவேலர், வ.உ.சி போன்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்ட மரபையும், மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி, அதை நாம் உயர்த்தி பிடிக்கும் விதமாக, இந்த  சர்வதேச தொழிலாளர்கள் தினமான மே நாளை நாம் கொண்டாட வேண்டும் என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறோம்.

படிக்க : மதுரை: மே 1 மாநாடு ஆலோசனை கூட்டம்

மேற்படி, மாநாடு விளக்கக் கூட்டத்திற்கு சுவரெழுத்து பிரச்சாரங்கள் மதுரையில் மற்ற அமைப்புகள்போல் நாங்களும் மாநாட்டின் நோக்கத்தை சுவரில் எழுதி மக்களுக்கு பிரச்சாரம் செய்தோம்.

அதில் குறிப்பாக மதுரை பழங்காநத்தம் அருகில் உள்ள பி.ஆர்.சி டிப்போ அருகில் நாங்கள் எழுதியிருந்த மே நாள் கூட்ட பிரச்சார சுவர் விளம்பரம் சிலரின் தூண்டுதலின் பெயரால் அளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி, இடத்தில் நாங்கள் எழுதிக் கொண்டிருந்த பொழுது எஸ்.எஸ்.காலனி போலீசு கான்ஸ்டபிள் முருகன் யாரும் புகார் அளிக்காத நிலையில், இவர் அதிகார தோரணையில், மற்றவர்கள் அதே சுவரில் விளம்பரம் செய்த இடத்தில்தான் நாங்களும் விளம்பரம் செய்தோம். அதை முழுமையாக எழுத விடாமல் தடுத்து நிறுத்தி எங்கள் தோழரில் ஒருவரை எஸ்.எஸ்.காலனி போலீசு நிலையத்தில் சட்ட விரோத தடுப்பு காவலில் சிறை வைத்தார்.

மேற்படி, தடுப்பு காவல் என்பது சட்டத்துக்கு புறம்பானது என்று வழக்கறிஞர்கள் வந்து பேசியவுடன், ரவுண்ட்ஸ்க்கு சென்று இருந்த ஆய்வாளர் புகழேந்தியிடமும் போலீசு நிலையத்தில் இருந்து அலைபேசி மூலமாக பேசியதில் மேற்படி ஆய்வாளர் காவல் நிலையத்துக்கு அலைபேசி மூலம் தகவல் தெரிவித்து எங்களை உடனே சட்ட விரோத தடுப்பு காவலில் இருந்து விடுவித்தார்.

மேற்படி காவலர் முருகன் யார் தூண்டுதலின் பேரில் இவ்வாறு செய்கிறார் என்பது தெரியவில்லை. தற்பொழுது மேற்படி இடங்கள் உட்பட இன்னும் கப்பலூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், கீரை துறை உள்ளிட்ட 10 இடங்களில் நாங்கள் எழுதிய மாநாடு சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டுள்ளது. அதனால் காவலர் முருகன் அவர்களை விசாரித்தும் யார் இவருக்கு பின்னால் உள்ளார்கள், யார் கூறி இவ்வாறு செய்கிறார் என்பதை விசாரித்தும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் கீரைத்துறை போலீஸ் ஸ்டேஷன் கீழ் வரும் பகுதிகளில் எழுதி இருந்த சுவர் விளம்பரங்களை போலீசே முன் நின்று அழித்துள்ளார்கள். அந்த வார்டு பகுதியானது பாஜக கவுன்சிலர் உள்ள பகுதியாகும். கவுன்சிலர் மற்றும் போலீஸ்  ஆகியோர் இணைந்து இப்படி சுவர் விளம்பரங்களை அழிக்கும் வேலையை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டுக்குள் போலீசை கையில் வைத்துக் கொண்டு இதுபோன்ற ஜனநாயக விரோத வேலைகளை பாஜகவினர் செய்து வருகின்றனர்.

மேற்படி மாநாட்டிற்கு சுவர் எழுத்து பிரச்சார வாயிலாக ஒவ்வொரு இடங்களிலும் ரூ.5000 செலவழித்து அத்துடன் உடல் உழைப்பையும் செலுத்தி ஓவியர்களும் தோழர்களும் வேலை செய்து வருகிறார்கள். இவ்வாறு சுவர் விளம்பரங்களை அழிப்பது என்பது கருத்துரிமை மீறலாகும். அத்துடன் எங்களுக்கு பணவிரயத்தையும் கஷ்ட நஷ்டத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தும் செயலாகும்.

படிக்க : சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | சுவரொட்டி – 1

இவ்வாறு மாநாட்டை சீர்குழிக்கும் நோக்கில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் அவர் பின் உள்ள சீர்குலைவு சக்திகள் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மேற்படி நபர்கள் செய்வது சட்ட விரோதம் மட்டுமல்லாமல் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது கூட அதனால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கவில்லை என்றால் நாங்கள் இதை கண்டித்து அடுத்த கட்ட போராட்ட வடிவங்களை கையில் எடுக்க நேரிடும்.

அதனால் ஐயா அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து மேற்படி காவலர் முருகன் மற்றும் கீரைத்துறை காவல்துறையினர், அவர்கள் பின்னால் இருக்கும் சட்டவிரோத சக்திகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் நாங்கள் செய்யும் பிரச்சார வேலை மற்றும் கருத்து பரப்புரை செயல்களை இடையூறு செய்யாவண்ணம் பாதுகாப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
ப.ராமலிங்கம்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு-புதுவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க