05.04.2023
டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்!
தமிழ்நாட்டை சூறையாட வரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க;
அம்பானி – அதானி பாசிசக் கும்பலை முறியடிப்போம்!
பத்திரிகை செய்தி
ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை வளங்களை சூறையாட கார்ப்பரேட்டுகள் எத்தணித்தபோது அதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி டெல்டாவையும் விவசாயிகளையும் காப்பாற்றியது தமிழ்நாடு.
மக்கள் போராட்டங்களின் விளைவாகவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
படிக்க : வீழாது தமிழ்நாடு எங்களில் கோட்டை | ம.க.இ.க சிவப்பு அலை | RED Wave | Pala Gana Song | Audio Launch
அனைத்து இயற்கை கனிம வளங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் அம்பானி – அதானி பாசிச கார்ப்பரேட் கும்பலுக்கு விற்பதையே ஒரே வேலையாக கொண்டிருக்கிறது மோடி – அமித்ஷா பாசிச ஆட்சி.
தமிழ்நாட்டு அரசுக்கு தெரியாமல் தமிழ்நாட்டு அரசை கேட்காமல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளான டெல்டா மாவட்டங்களில் சேத்தியா தோப்பு, வடசேரி, மைக்கேல்பட்டி ஆகிய பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் கொடுத்துள்ளது. இது தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒன்றிய அரசு விடுத்துள்ள சவால் ஆகும்.
2024 ஆம் தேர்தலில் வெற்றி வாகை சூடி இந்துராஷ்டிரத்தை அமைக்கும் கனவில் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கும்பலுக்கு தேர்தலுக்கு முன்னரே தமிழ்நாட்டின் ஓர்மையை ஒழித்துக் கட்டுவதும் இயற்கை வளங்கள் பொதுத்துறை நிறுவனங்களை அம்பானி, அதானிக்கு தாரை வார்ப்பது முக்கியமான கடமையாக உள்ளது.
டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மோடியின் இந்த சதித்திட்டத்தை நிச்சயம் முறியடிப்பார்கள் என்று மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321