138-வது மே தினம் || பேரணி – ஆர்ப்பாட்டம்

சென்னை ஆவடி – காஞ்சிபுரத்தில் மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம்! || பு.ஜ.தொ.மு

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே, நண்பர்களே, வணக்கம்! தொழிலாளி வர்க்கத்தின்  உரிமைக்கும்,  விடுதலைக்கு  வித்திட்ட  நாள்தான் மே நாள்.

அந்நாளை‌ உயர்த்திப் பிடிக்கும் விதமாக, காவி – கார்ப்பரேட் ‌‌பாசிசத்தை வீழ்த்தி, பாசிச எதிர்ப்பு ‌ஜனநாயக குடியரசை அமைக்க வேண்டும் என்ற 138-வது மே நாளின் அரசியல் கடமையை நிறைவேற்ற, இந்திய தொழிலாளி வர்க்கமும் ஏனைய உழைக்கும் மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டியிதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் 1.05.2023 அன்று மாலை ஆவடி இரயில் நிலையத்திலிருந்து பேரணி துவங்கும். ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த எழுச்சிமிகு நிகழ்வில், பு.ஜ.தொ.மு.-வின் முன்னாள் பெருளாளர் தோழர் விஜயகுமார் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர் அமிர்தா ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் காவலான் கேட் அருகில் புதிய ஜநனாயக தொழிலாளர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் மே தினத்தன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் ஆக்சிஸ் இந்தியா கிளை தலைவர் தோழர் பழனிவேல் தலைமை வகிக்கிறார். மக்கள் அதிகாரம் சென்னை மண்டல தோழர் சரவணன் மே நாள் உரையாற்றுகிறார்.

மே 1, 2023 அன்று நடக்கவிருக்கும் இவ்விரு மே நாள் ஆர்ப்பாட்டங்களிலும் தோழர்கள், நண்பர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

138-வது மே நாளின் அரசியல் கடமையை நிறைவேற்றுவோம்!
பாசிச எதிர்ப்பு ‌ஜனநாயக குடியரசை நிறுவிடுவோம்!
வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!

தகவல்: புஜதொமு (மாநில ஒருங்கிணைப்புக் குழு)

***

நெல்லை மே நாள் ஆர்ப்பாட்டம் || மக்கள் அதிகாரம்

138-வது மே தினத்தை முன்னிட்டு மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம் சார்பாக மே தினத்தன்று மேலப்பாளையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. அனைத்து தோழர்களும் ஜனநாயக சக்திகளும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: மக்கள் அதிகாரம், நெல்லை மண்டலம்.

000

138வது மே நாள் || மதுரையில் ஆர்ப்பாட்டம் || மக்கள் அதிகாரம்

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு துவளாது போராடு என்ற தலைப்பில் மதுரை உசிலம்பட்டி பகுதியில் மாலை 4.30 மணியளவில் மே தின ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தோழர்கள் நண்பர்கள் ஜனநாயக சக்திகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு அமைக்க மே நாளில் சூளுரைப்போம்!

ம.க.இ.க – பு.மா.இ.மு – மக்கள் அதிகாரம் மதுரை மண்டலம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க