கடலூரில் மே தின ஆர்ப்பாட்டம்

138-வது மே தினத்தையொட்டி கடலூர் மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர்கள் ஜனநாயக சக்திகள் பெறும் திரளாக கலந்து கொண்டனர்.

138-வது மே நாள் நிகழ்ச்சி கடலூர் அம்பேத்கர் சிலை அருகில் மக்கள் அதிகாரம் சார்பாக தோழர் ராமலிங்கம் தலைமையில் (மக்கள் அதிகாரம் பகுதி இணை செயலாளர்) முழக்கமிட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மே நாளின் சிறப்பை பற்றி விளக்கி பேசினார். திராவிட மாடல் என்ற பெயரில் திமுக கட்சி எவ்வாறு அயோக்கியத்தனம் செய்து கொண்டிருக்கிறது என்பதை விளக்கினார்.

தோழர் வெண்புறா குமார் (பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு) தன்னுடைய ஆட்சியிலே திராவிட முன்னேற்ற கழகம் சட்டசபை விட்டு வெளியேறுவது மக்களை ஏமாற்றக்கூடிய ஒன்றாக இருக்கிறது. பி.ஜே.பி.யின் திட்டங்களை மறைமுகமாக நடைமுறைப்படுத்தி வரும் திராவிட மாடல் திமுக-வை கண்டித்து பேசினார்.

தோழர் கமல் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), புரட்சியாளர் அம்பேத்கர் தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் எந்தெந்த சட்டங்களை கொண்டு வந்தார் 8 மணி நேர வேலை திட்டத்தை எவ்வாறு அமல்படுத்தினார் என்பதை விளகிப் பேசினார்.

தோழர் விஜயன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் புதுவை), பாசிசம் மோடி அரசு நாட்டை எவ்வாறு சூறையாடி கொண்டு வருகிறது என்பதை பற்றி பேசினார். பல்வேறு நாசக்கார திட்டங்களையும் பற்றி விளக்கினார்.

தோழர் திருவரசு (பொதுநல இயக்க செயலாளர்), சிக்காகோ நகரில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் போராடிப் பெற்ற மே தின வரலாற்றையும், தற்போது பாசிசம் மோடி அரசும் திராவிட மாடல் அரசும் எவ்வாறு மக்களுக்கு  அநீதிகளை செய்த கொண்டிருக்கிறது என்பதை பற்றி பேசினார்.

தோழர் கார்த்திகேயன் (மக்கள் அதிகாரம்) மே தின முழக்கமிட்டு தொழிலாளர்களை வாழ்த்தி பேசினார்.

தோழர் பரிவாணன் (வெள்ளி கடற்கரை வியாபாரிகள் சங்கம்), ஆரியத்தை வீழ்த்த தயங்குகிறது இந்த திராவிட அரசு என்று பேசினார்.

தோழர் ஜெகன் (இடதுசாரி அமைப்பு), வேங்கை வயலில் தண்ணீர் தொட்டியில் மலத்தை கலந்த ஆதிக்க சாதி வெறியர்களை ஏன் இன்னும் இந்த திராவிட மாடல் அரசு கண்டிக்கவில்லை, கிருஷ்ணகிரியில் ஆணவப் படுகொலை இரண்டு நடந்திருக்கிறது, அதற்கும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை இந்த திராவிட மாடல் அரசு. என்று கண்டன உரையாற்றினார்.

தோழர் முருகானந்தம் (மண்டல செயலர் மக்கள் அதிகாரம்), தற்போது உலகில் எந்த அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதை பற்றியும் மற்றும் இலங்கையில் நடந்த பொருளாதார நெருக்கடி எப்படி மக்கள் எழுச்சிமிகு போராட்டமாக மாறியதோ அதே போல் உலகம் முழுவதும் கூடிய விரைவில் நடக்க இருக்கிறது. என்று பேசினார்.

இறுதியாக தோழர் பெருமாள் (மக்கள் அதிகாரம்) நன்றியுரை ஆற்றினார்.

தகவல்:
மக்கள் அதிகாரம்
கடலூர் மண்டலம்
9791286994

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க