இந்தியாவையே உலுக்கிய கொடூரச் செயல்தான் மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நடந்த மனித தன்மையற்ற கொடூர சம்பவம். இந்த சம்பவமானது கடந்த மே நான்காம் தேதி மணிப்பூர் கலவரம் தொடங்கிய நாளன்று நிகழ்ந்தேறியது. தற்போது இந்த கொடூர சம்பவமானது 77 நாட்கள் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த கொடூரச் செயலை நிகழ்த்திய மெய்தி இனவெறியர்கள் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் கைக்கூலிகள்.
இக்கொடூர சம்பவத்திற்கு மணிப்பூர் மாநில போலீசு உடந்தையாக இருந்தது அம்பலமாகியுள்ளது. மூன்று மாதங்களாக பற்றி எரியும் மணிப்பூர் கலவரம் குறித்து பாசிஸ்ட் மோடி வாயைத் திறக்கவில்லை. 77 நாட்கள் பிறகு வெளிவந்த வீடியோவை கண்டு முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.
மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல மாநிலங்கள் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் பல ஜனநாயக சக்திகளும் பல கல்லூரி மாணவர்களும் போராட்ட தொடங்கியுள்ளனர்.
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் மணிப்பூர் வன்முறைக்குக் காரணமான பாசிச மோடி அரசை எதிர்த்து இன்று (25.07.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பாசிச மோடி அரசைப் பதவி விலகுமாறு முழக்கமிட்டனர்.
தகவல்:
வினவு களச்செய்தியாளர்