பற்றி எரியும் மணிப்பூர் – பற்ற வைத்தது காவி | தெருமுனைக் கூட்டம் | தேனி

தேனி மாவட்டம் போடி பகுதியில் ”பற்றி எரியும் மணிப்பூர் பற்ற வைத்தது காவி” என்ற தலைப்பில் தோழர். கணேசன், மக்கள் அதிகாரம் போடி நகரச் செயலாளர் தலைமையில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

பற்றி எரியும் மணிப்பூர் – பற்ற வைத்தது காவி
ஆர் எஸ் எஸ், பிஜேபியை தடைசெய்

தெருமுனைக் கூட்டம்

தேனி மாவட்டம் போடி பகுதியில் ”பற்றி எரியும் மணிப்பூர் பற்ற வைத்தது காவி” என்ற தலைப்பில் தோழர். கணேசன், மக்கள் அதிகாரம் போடி நகரச் செயலாளர் தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

மதுரை மண்டல பொருளாளர் தோழர் சிவகாமு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து 80 நாட்களுக்கு மேலாக பற்றி எரிந்து கொண்டிருக்கும் மணிப்பூரில் இருந்து வெளியான பெண்களின் மீதான மிருகத்தனமான அந்த ஒடுக்குமுறை காட்சிகளை பார்த்து ஒட்டுமொத்த உலகமும் பதட்டம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் இந்த கொலை பாதக செயலை உடனடியாக கண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மக்கள் அதிகாரம் மக்கள் மத்தியில் இந்த பிரச்சார இயக்கத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக போடி பகுதியில் தெருமுனைக் கூட்டம் நடத்துகிறோம் என்று இந்த கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேசினார். இந்த ஆர்எஸ்எஸ் பிஜேபி பாசிச கும்பலை ஒழித்துக் கட்டாமல் நமக்கு வாழ்வு இல்லை என்று திருமங்கலம் பகுதி மக்கள் அதிகாரம் தோழர் நாகராஜ் பேசினார். மக்கள் கூடும் பகுதி என்பதால் பலரும் ஆர்வமாக கேட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.


இவண்
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க