கடந்த 9 நிதியாண்டுகளில், 2014-15 முதல் 2022-23 வரை, வங்கிகள் மொத்தம் ரூ.14.56 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக ஆகஸ்ட் 7 அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க ஆட்சியில் மாபெரும் வங்கிக் கொள்ளை!
- கடந்த 10 ஆண்டுகளில் ரூ.14.56 இலட்சம் கோடிக்கான வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது!
- ஏமாற்றும் உள்நோக்கம் கொண்ட கடனாளிகளது ( Willful defaulters) பட்டியலை வெளியிட அரசும், ரிசர்வ் வங்கியும் மறுப்பது ஏன்?
- பொதுச்சொத்தை களவாடிய கார்ப்பரேட் கனவான்கள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
- கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 12 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் புதிய கடன் தரப்பட்டது ஏன்?
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
தமிழ்நாடு.
நன்றி : புதிய தொழிலாளி