இலாபவெறிபிடித்த முதலாளித்துவ சமூகத்தில்… | கவிதை

வியாக்கியானம் புதிதல்ல... முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டுகிறது என முன்னறிந்து சொன்ன மார்க்சின் தீர்க்கமாக பார்வை புதிது!

இலாபவெறிபிடித்த முதலாளித்துவ சமூகத்தில்…

வியாக்கியானம் புதிதல்ல…
முதலாளித்துவம் தனது சவக்குழியை
தானே தோண்டுகிறது என
முன்னறிந்து சொன்ன மார்க்சின் தீர்க்கமாக
பார்வை புதிது!

மரணம் புதிதல்ல…
தூக்குமேடை ஏறி கண்களை திறந்து
மரணத்தை எதிர்கொண்ட
பகத்சிங்கின் துணிச்சல் புதிது!

வாழ்வது புதிதல்ல…
இட்லரை வீழ்த்த மகனை பறி கொடுத்த
ஸ்டாலின் போல வாழ்வது தான் புதிது…

போராட்டம் புதிதல்ல…
மக்களுக்கு புரிய வைத்து
போராடுவதுதான் புதிது!

முரண்பாடு புதிதல்ல…
அதை விவாதித்து
தீர்க்கமுயல்வது தான் புதிது!

உண்பது புதிதல்ல…
பகிர்ந்து உண்பதுதான் புதிது!

வாழ்வது புதிதல்ல…
நேர்மையுடன் வாழ்வதுதான் புதிது!

அரசியல் பேசுவது புதிதல்ல…
எந்த வர்க்கத்திற்காக பேசுகிறோம் என்ற
புரிதலுடன் பேசுவதுதான் புதிது!

கல்வி பயில்வது புதிதல்ல…
உழைப்போர் நலன்கருதி
செயல்படுவதுதான் புதிது!

புதியவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க