எதற்கு வாழ்த்துகிறீர்கள்?

பாரத தாயின் புகழ் பாடி மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி வேடிக்கை பார்த்ததற்கா?

தற்கு வாழ்த்துகிறீர்கள்?

உலகம் அறிந்த தலைவர்
நாடு போற்றும் பிரதமர்
G20-இன் நாயகன்
சந்திரயான்-3 விட்ட சாதனையாளன்
தாடி வளர்க்கும் சன்னியாசி
‘பாரத’ பிரதமர் மோடிக்கு
இன்று பிறந்தநாளாம்!

காவி கும்பலும்
கார்ப்பரேட் களவாணிகளும்
போட்டி போட்டுக்கொண்டு
வாழ்த்து சொல்கின்றனர்!
எதற்காக இந்த வாழ்த்துக்கள் எல்லாம்?

பாரத தாயின் புகழ் பாடி
மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி
வேடிக்கை பார்த்ததற்கா?

ஏழைகளை ஒட்டச்சுரண்டி
இந்திய நாட்டை
அம்பானி-அதானி கார்ப்பரேட்களிடம்
அடகு வைத்ததற்கா?

“மனிதர்கள் மிருகமானால்”
என்ற படத்தை
குஜராத் கலவரத்தில்
நேரலையில் காட்டியதற்கா?

பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டிய மக்களை
பார்ப்பனியம் பழக வைத்து
அடிமையாக்குவதற்கா?

எங்கள் நண்பர்களான
முஸ்லிம், கிறித்துவர்களை
எதிரியாக சித்தரித்து
வெறுப்பு அரசியல் செய்வதற்கா?

ஏழைகளின் வங்கிக்கணக்கில்
15 லட்சம் போடுவதாக கதையளந்துவிட்டு
7.5 லட்சம் கோடி ரூபாயை சுருட்டியதற்கா?

இந்தியாவை பாரதமாகவும்
மனிதர்களை மதவெறி மிருகங்களாகவும்
மாற்றி பாசிச சர்வாதிகாரத்தை நிறுவத்துடிக்கும் உனக்கெதிராய்
அணித்திரள வேண்டிய நேரம் வந்துவிட்டது!

இனியும் பொறுமை காத்தால்
நாங்கள் 2000 ஆண்டுகளுக்கு
பின்னோக்கி சென்று விடுவோம்!

இந்து என்ற ஒற்றை வார்த்தையை வைத்து
தேசப்பெருமிதம் என்ற  போதையை  வைத்து
சாதிவெறி, இனவெறி பிளவை வைத்து மட்டும்
9 ஆண்டுக்கால ஆட்சி நடத்திய ஜி,
இன்னொரு ஆண்டு
பிரதமராக பிறந்தநாள் கொண்டாடினால்
இது இந்தியாவாக இருக்காது!
இந்துராஷ்டிரமாகத்தான் இருக்கும்!


கர்ணன்



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க