02.10.2023

க்கள் கல்வி கூட்டியக்கம் ஒருங்கிணைத்த ஆசிரியர்களின் கோரிக்கை மாநாடு மதுரையில் நேற்று (01.10.2023) காலையிலிருந்து மாலை வரை நீதியரசர் கிருஷ்ணஜயர் அரங்கில் நடைபெற்றது.

இதில் பகுதி நேர பள்ளி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்க!
அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கும் சுயநிதி கல்லூரி ஆசிரியருக்கும் பணி பாதுகாப்பு மற்றும் யு.ஜி.சி ஊதியம் வழங்கிடுக!
என்ற மையமான முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பேராசிரியர்களும் பல்வேறு ஜனநாயக சக்திகளும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் கலந்துகொண்டு இன்றைய கல்வியின் நிலைமை, அரசியல் சூழல் குறித்து பல்வேறு கருத்துக்களையும் முன் வைத்தனர்.

குறிப்பாக பேராசிரியர் வீ.அரசு மற்றும் பேராசிரியர் ப.சிவக்குமார் ஆகியோர் இருவரும் தமிழ்நாட்டில் தனியார் கல்லூரி தொடங்கியதில் இருந்து தனியார்மயம் தாராளமயம் உலகமயம் காலகட்டங்கள் அதிலிருந்து இன்று நாம் சந்திக்கும் பிரச்சனையை அணுக வேண்டிய பார்வையை முன்வைத்து பேசினர்.

ஆசிரியர் சு.உமாமகேஸ்வரி பேசும்போது கல்வியில் அரசின் பாராமுகம் எப்படி கல்வி சூழலை பாதித்து வருகிறது என்பதையும் விரிவாக பேசினார்.

இது போக பல்வேறு மாணவர் அமைப்புகளும் கலந்துகொண்டு உரையாற்றினர். அதில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பாக மாநில ஒருங்கிணைப்பு குழு தோழர் ரவி உரையாற்றினார்.

இறுதியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அது முடிந்த பிறகு மக்கள் கல்வி கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இரா.முரளி அவர்கள் தொகுப்புரையாற்றினார். அதில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததிலிருந்து தொடங்கி பங்கேற்றது, பேசியது மற்றும் உதவிகள் செய்தது உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசிய, கலந்து கொண்ட உதவி செய்த அனைவருக்கும் புத்தகங்கள் கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

அரங்க ஏற்பாடுகளுக்கு எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும் கலந்து கொண்டு உதவிசெய்தனர்.

மக்கள் கல்வி கூட்டியக்கம் ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது தேவையானது என்பதை மாநாடு பறைசாற்றியிருக்கிறது.

மக்கள் கல்விக் கூட்டியக்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி


இவண்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க