ரஞ்சனா நாச்சியார்! சமூகப் போராளியா? ஊரை ஏமாற்றும் கோமாளியா?

பேருந்து ஓட்டுனரிடம் சென்று "உங்களுக்கெல்லாம் அறிவில்லையா? மாணவர்கள் தொங்கிக்கொண்டு செல்கிறார்களே உங்களுக்கு புத்தி இல்லையா?" என்று திட்டுகிறார். பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டிருக்கும் மாணவர்களை இழுத்துப் போட்டு சாராமரியாக அடித்துத் துவைக்கிறார். பிறகு நடத்துனரைப் பார்த்து "ஏண்டா நாயே உனக்கு அறிவில்லையா?" என்று வசை மாரி பொழிகிறார்.

து ஒரு நகரப் பேருந்து. பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிலே இடம் இன்றி தொங்கிக் கொண்டு போகிறார்கள். சிலர் தொங்கியபடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த பேருந்துக்கு பின்பு ஒரு காரில் வந்த ஒரு பெண், பேருந்தை நிறுத்துகிறார்.

பேருந்து ஓட்டுனரிடம் சென்று “உங்களுக்கெல்லாம் அறிவில்லையா? மாணவர்கள் தொங்கிக்கொண்டு செல்கிறார்களே உங்களுக்கு புத்தி இல்லையா?” என்று திட்டுகிறார். பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டிருக்கும் மாணவர்களை இழுத்துப் போட்டு சாராமரியாக அடித்துத் துவைக்கிறார். பிறகு நடத்துனரைப் பார்த்து “ஏண்டா நாயே உனக்கு அறிவில்லையா?” என்று வசை மாரி பொழிகிறார். நீங்கள் யார் என்று மக்கள் கேட்டபோது தான் ஒரு போலீஸ் என்றும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை அவரே ஒரு ஆள் வைத்து வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் புழங்க விடுகிறார். பிறகு என்ன சமூக வலைதளங்களில் ஒரே அப்ளாஸ்தான்.

சிங்கப்பெண், புலிப் பெண் என்று மிகப்பெரிய வரவேற்பு.அந்த பெண்ணின் பெயர் ரஞ்சனா நாச்சியார் என்று தெரிந்தவுடன், சமூகத்தை திருத்த வந்த மாமணி எங்கள் சாதியை சேர்ந்தவர் என்று தேவர் ஜாதியை சேர்ந்த பலரும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

யார் இந்த ரஞ்சனா நாச்சியார்?

ராமநாதபுரம் சமஸ்தானம் ராஜா பாஸ்கர சேதுபதியின் பேத்தியும் நடிகையுமானவர்தான் இந்த ரஞ்சனா நாச்சியார். மேலும் பாரதிய ஜனதா கட்சியில் மாநில அளவிலான கட்சிப் பொறுப்பில் உள்ளார். அவர் செய்த செயலை பற்றி நாம் கொஞ்சம் பரிசீலிக்க வேண்டி உள்ளது.

பேருந்திலே மாணவர்கள் தொங்கிக் கொண்டு போகிறார்கள் என்பதை பார்த்து ரஞ்சனாவுக்கு கோபம் வந்துவிட்டது. இழுத்துப் போட்டு அடிக்கிறார். இருக்கட்டும், இதைவிட அதிகமாக பேருந்துகளிலும் வாகனங்களிலும் தேவர் குருபூஜை உட்பட பல குரு பூஜைகளில் பலரும் அம்மணமாகவும் அரை அம்மணமாகவும் தொங்கிக் கொண்டு போகிறார்களே அங்கே போய் இவர் ஏதாவது செய்ய முடியுமா?


படிக்க: மானாமதுரை பேருந்து நிறுத்தம்: மக்களை அலையவிடும் அதிகார வர்க்கம்!


அங்கே போகவும் மாட்டார், இழுத்துப் போட்டு அடிக்கவும் மாட்டார். ஏனென்றால் அது பெருமையின் அடையாளம்.

செல்வதோ அரசு பேருந்து, அதில் செல்பவர்களோ அரசு பள்ளி மாணவர்கள். எப்படியும் ஒடுக்கப்பட்ட, வறுமை நிலையில் உள்ளவர்கள் தான் அரசு பள்ளியில் படிக்க வைப்பார்கள். ஆகவே அவர்களை யார் வேண்டுமானாலும் தூக்கி போட்டு மிதிக்கலாம் என்ற ஆதிக்க பணக்கார புத்தி தான் அந்த மாணவர்களை அடிக்க வைத்திருக்கிறது.

ஹெல்மெட் போடாதவர்களையும் காரில் பெல்ட் அணியாதவர்களையும் கை வைக்க துணிச்சல் இந்த அம்மாவுக்கு இருக்குமா? ஏனென்றால் காரில் வருபவர்கள் எல்லாம் ரஞ்சனாவின் வர்க்கம் அல்லவா.

சமூகத்தில் நடக்கும் அநியாயங்களுக்கு கொப்பளிக்கும் அந்த ரஞ்சனா நாச்சியார், பிஜேபியில் நடக்கும் பாலியல் அத்திமீறல்களுக்கு யாரை இழுத்துப் போட்டு மிதிப்பார்.

ஏழு திட்டங்களில் மட்டும் ஏழரை லட்சம் கோடி ரூபாய் மெகா ஊழல் செய்திருக்கிற இந்த மோடி அரசில் யாரை இழுத்துப் போட்டு உதைப்பார்?

நாடு முழுக்க மதக் கலவரங்களையும் சாதிக் கலவரங்களையும் உருவாக்குகின்ற ஆர்.எஸ்.எஸ்-இல் யாரை தூக்கி போட்டு மிதிப்பார்?

அப்படி என்றால் நீங்கள் பேருந்தில் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆதரவளிக்கிறீர்களா என்று எதிர் கேள்வி கேட்கலாம்?

பேருந்தில் தொங்குவது என்பது ஒரு செயல். அதற்கு பல்வேறு காரணிகள் அடிப்படையாக இருக்கின்றன. மாநகரத்தில் உள்ள மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பேருந்துகள் இல்லை. பேருந்தில் தொங்கி கொண்டு செல்வது ஹீரோயிசம் என்ற ஒரு கருத்து சினிமா உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டிருக்கின்றது. இப்படி பல்வேறு அடிப்படை காரணங்கள் இருக்கின்ற போது அதை எல்லாம் விட்டுவிட்டு மாணவர்களை குற்றவாளியாக்குவது மட்டும் ஏன் என்ற கேள்வியை தான் நான் முன் வைக்கிறேன்.

அடுத்ததாக இன்னொரு விஷயத்துக்கு வருவோம். பேருந்தில் தொங்கிக் கொண்டு செல்லும் மாணவர்களை அடிக்கும் பொழுது எல்லோருக்கும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. ஆம். இந்தப் பெண் செய்தது சரிதான் என்று. அடி வாங்கும் இடத்தில் தன்னுடைய மகனை யாரும் வைத்து பொருத்திப் பார்ப்பதில்லை. இதைத் தானே இந்த அரசு உருவாக்குகிறது. பணக்காரர்கள் செய்கின்ற தவறெல்லாம் தவறல்ல அது ஒரு கலாச்சாரம் என்றும் அதைப் பார்த்து தங்கள் ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் செய்யக்கூடிய செயல் மட்டுமே தவறு என்றும் திட்டமிட்டு பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. எஸ்.ஆர்.எம் கல்லூரியில் கஞ்சா அடிப்பதும் அடிதடி செய்வதும் பிரச்சனை அல்ல; மாறாக மாநிலக் கல்லூரி மாணவர்களும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் அடிதடியில் ஈடுபடுவது தான் பிரச்சனை என்றல்லவா பொதுப்புத்தி இருக்கிறது.

அந்தப் பரப்புரை தான், அந்த சிந்தனை தான் நம் மனதில் பரவி கிடைக்கிறது என்பதே உண்மை. அதனால் தான் அந்த மாணவர்களை அடிக்கும் பொழுது நமக்கெல்லாம் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறது.


படிக்க: மாணவர்களுக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க மறுக்கும் அரசுக்கு என்ன தண்டனை? | புமாஇமு பத்திரிகை செய்தி


ஒரு பொதுவெளியில் ஒரு நபர் கண்ணில் பட்டவர்களை எல்லாம் அடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான காரணம் சரியோ தவறோ; அதுவல்ல பிரச்சினை. சட்டம் என்ற ஒன்று எதற்காக இருக்கிறது. தவறு செய்பவர்களை எல்லோரும் தண்டிக்கலாம் என்றால் ஆணவக் கொலை குற்றவாளிகளை நாம் போய் தண்டித்து விடலாமா?

நான் போலீஸ் என்று சொன்னவுடன் ஏன் மக்கள் அனைவரும் அமைதியாக இருந்தனர் என்பது பிரச்சனை. போலீஸ் என்றால் எவ்விதமான தவறையும் செய்யலாம் என்பது அல்ல.

பணியின் போது செய்யக்கூடிய செயல்களுக்கு மட்டுமே போலீஸ் உள்ளிட்ட பாதுகாப்பு நிறுவனங்களுக்கு விதிவிலக்கு இருக்கிறதே ஒழிய, தவறுகளுக்கு அல்ல.

இதுவரை ரஞ்சனா கைது செய்யப்படாததற்கு காரணம், அவருடைய சாதிய பின்புலமும் பிஜேபியில் இருப்பதும்தான்.

பாரதிய ஜனதா கட்சியில் இருந்தால் யாரை வேண்டுமானாலும் இழுத்துப்போட்டு அடிக்கலாம் என்ற தைரியத்தை கொடுத்தது எது?

பாரதிய ஜனதா கட்சி என்பது ஒரு பாசிச கட்சி அந்த கட்சியின் பெயரால் யார் வந்தாலும் அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும்.

ரஞ்சனா நாச்சியாரின் செயலை இப்போது நாம் ஆதரித்தால், இப்படித்தான் பால் வியாபாரியான முகமது அக்லக் பசுக்கொலைக் குற்றவாளி என்று அடித்தே கொல்லப்பட்டார். இந்தியாவில் நடைபெறக்கூடிய பல்வேறு சாதிய தாக்குதல்களும் இப்படி ஒரு காரணம் சொல்லித்தான் பொதுவெளியில் நடைபெறுகிறது. மக்களும் அமைதியாக இருக்கிறார்கள்.

இதன் காரணமாக ரஞ்சனா நாச்சியாரும் அவருடன் வந்தவர்களும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். (தற்போதைய நிலையில் ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டுள்ளார்)

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் இனி இப்படிப்பட்ட தாக்குதலை பல்வேறு இடங்களிலும் மேற்கொண்டு தங்களை ஹீரோவாக காட்டிக் கொண்டு சாதிய மத மோதல்களை உருவாக்குவார்கள் என்பது திண்ணம்.


தோழர் மருது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க