கடந்த மாதம் 7-ஆம் தேதி காசா மீது தொடுக்கப்பட்ட, இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்கள் 41 நாட்கள் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இத்தாக்குதல்களில் இதுவரை 11,100 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தற்போது, 500 மருத்துவ ஊழியர்களும், 5,000 பாலஸ்தீன அகதிகளும் தஞ்சம் புகுந்திருக்கும் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையை கடந்த நான்கு நாட்களாக சூழ்ந்திருக்கிறது இஸ்ரேல் கொலை படை.
அல் ஷிபா மருத்துவமனையை ஹமாஸ் படையினர் தலைமையகமாக கொண்டிருப்பதாகவும், அங்கு ரைஃபில், கிரைனைட்ஸ், ஹமாஸ் சீருடை உள்ளிடவைக் கொண்ட பை ஒன்று கிடைத்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது இஸ்ரேல் இராணுவம்.
ஆனால், பாலஸ்தீன தேசிய நிறுவன முன்னெடுப்பின் (Palestiane national initiative) பொது செயலர் முஸ்தபா பர்கௌதி, “ஹமாஸ் அமைப்பினரின் உடைமைகளை இஸ்ரேல் இராணுவமே வைத்துவிட்டு மருத்துவமனையில் கிடைத்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டு நாடகமாடுகிறது” என்கிறார்.
படிக்க : கிடாரிபட்டி ஆதிக்க சாதி வெறியாட்டம்! சாதி வெறியர்களை வாழ்நாள் சிறையில் அடை! | தோழர் ரவி
அதேபோல், “மருத்துவமனைக்குள்ளிருந்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்பதாக இஸ்ரேல் படையினர் கூறுவதும் பொய்” என்கிறார் அல் ஷிபா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ ஊழியர் முகமது அபு சல்மியா. மேலும் அவர், “இஸ்ரேல் படையினர் மருத்துவமனைக்கு வரக்கூடிய தண்ணீர் குழாயை குண்டு போட்டு தகர்த்துவிட்டனர். இதனால் போதிய தண்ணீரும் உணவுமின்றி நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளை வைத்து பராமரிக்கும் இன்குபேட்டர்களுக்கும் (மின்சாரம் துண்டிக்கப்பட்டதால்) பழுதானதால் பச்சிளங் குழந்தைகள் கொத்துக்கொத்தாக மடிந்து வருகின்றனர்.
அல் ஷிபா மருத்துவமனையிலுள்ள தீக் காயப் பிரிவு, பிரசவ வார்ட் பிரிவு உள்ளிட்ட முக்கிய சிகிச்சை வார்டுகளின் நுழைவாயில்களிலும் இஸ்ரேல் இராணுவம் ரோந்து வந்த வண்ணமுள்ளது. கண்ணில் படும் பாலஸ்தீனியர்கள் -அவர்கள் நோயாளிகள் என்றும் பாராமல்- மீது கொடூர தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. இதுவன்றி தனது இராணுவ டாங்கிகளை மருத்துவமனைக்குள் கொண்டுவரவும் முயன்று வருகிறது. மருத்துவமனை முழுவதும் டிரோன்களை பறக்கவிட்டு பீதியை உண்டாகியுள்ளது இஸ்ரேல் இராணுவம்.
இராணுவம் சூழ்ந்து வந்தாலும் மற்றவர்களுடன் சேர்ந்து உயிரை விடுவோமே தவிர, ஒருபோது நோயாளிகளை தனியே தவிக்கவிட்டு செல்லமாட்டோம்” என்று மனிதநேயத்துடன் கூறுகிறார் மருத்துவர் ஒருவர்.
இராணுவம் நடத்திய தாக்குதல்களில் குத்துயிரும் குலையுருமாக உயிருக்கு போராடிவரும் நோயாளிகளையும் விட்டுவைக்கவில்லை இஸ்ரேலின் இனவெறி.
ஆதினி
செய்தி ஆதாரம் : அல்ஜசீரா