மதுரவாயல்: மக்களைத் தண்ணீரில் தத்தளிக்க விட்ட கவுன்சிலர்!
உடனடியாக நடவடிக்கை கோரி கொந்தளித்த மக்கள்!
சென்னை ஆலம்பாக்கம் மெயின் ரோட்டில், மதுரவாயல் காவல் உதவி நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
ஆலம்பாக்கம் பகுதி 147-வது வார்டில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக மூன்று நாட்களுக்கு மேலாக மின்சாரம் மற்றும் பால், உணவுப் பொருட்கள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வந்த மக்கள் தன்னிச்சையாகச் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் வசிக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வசீகரன், இப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போது “இடுப்பளவிற்குத் தண்ணீர் இருப்பதால் மக்கள் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றார்கள். மூன்றுக்கும் மேற்பட்ட மின்சாரக் கம்பங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வார்டின் கவுன்சிலரை மக்களால் தொடர்புக் கொள்ளவே முடியவில்லை. போன் செய்தாலும் எடுப்பதில்லை. அவர் மக்களைத் தண்ணீர் தத்தளிக்க விட்டுள்ளார். உடனடியாக சென்னை மேயர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், “போலீசாரைப் பார்த்து உங்கள் வீட்டில் தண்ணீர் தேங்கி இருந்தால் இது மாதிரி நடவடிக்கை எடுக்காமல் இருப்பீர்களா? இதற்காக போயஸ் கார்டனிலா வீடுக்கட்ட முடியும்?” என்று சரமாரியாகக் கேள்வியெழுப்பினர்.
உடனடியாக அப்பகுதியில் தேங்கியிருக்கும் மழை நீரை அப்புறப்படுத்தி, மின்சாரத்தை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
வினவு களச்செய்தியளார்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube