நாகப்பட்டினம்: “வேண்டாம் பிஜேபி; வேண்டும் ஜனநாயகம்” பேனரை அகற்றிய சங்கி போலீஸ்

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக தமிழ்நாடு போலீஸ் துறை செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படும் போலிஸ் துறை, ஆர். எஸ்.  எஸ் – பி.ஜே.பி சங்கி கும்பலுக்கு நேரடியாக வேலை செய்து வருகிறது.

.க.இ.க, பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் சார்பாக வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி “வேண்டாம் பிஜேபி; வேண்டும் ஜனநாயகம்” ”கோடி மக்களிடம் கொண்டு செல்வோம்” என்ற முழக்கத்தின் அடிப்படையில் தமிழ் நாடு முழுவதும் 1000 தெருமுனைப் பிரச்சாரம் 100 தெருமுனைக் கூட்டம் என இரண்டாம் கட்ட பிரச்சார இயக்கத்தைத் வீச்சாகக் கொண்டு சென்று வருகிறோம். ஜனநாயக சக்திகள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆனால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி சங்கி கும்பலின் நெஞ்சங்களில் கடப்பாரையை இறங்கியது போல் தமிழ்நாடு முழுவதும் எங்கள் முழக்கத்தை பார்த்து துடித்து கொண்டிருப்பதோடு மட்டும் அல்லாமல் எங்கள் பிரச்சார இயக்கத்திற்கு எதிரான வேலைகளையும் தமிழ் நாடு போலிஸ் துறையை தூண்டி விட்டு சுவர் விளம்பரங்களை அழிக்கும் வேலைகளையும் செய்து வருகின்றனர்.

”வேண்டாம் பிஜேபி; வேண்டும் ஜனநாயகம்” என்ற பிரச்சார இயக்கத்தை ஒட்டி நாகப்பட்டினம் மாவட்டம் கணபதிபுரம் என்ற பகுதியில் வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம் என்ற பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்து நெஞ்செரிச்சல் அடைந்து ஆர்.எஸ்.எஸ் சங்கி கும்பல், மக்கள் அதிகாரம் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜ்குமார் அவர்களுக்கு போன் செய்து மிரட்டியதோடு அல்லாமல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனரையும் 15-க்கும் மேற்பட்ட நாகப்பட்டின போலிஸை அழைத்து வந்து பேனரை எடுத்துச் சென்றுள்ளனர்.


படிக்க: திருவாரூர் சுவர் விளம்பரத்தை அழித்து போலீஸ் அராஜகம்! | ஜனநாயக சக்திகள் கண்டனம்


இதுபோன்று திருவாரூர் மாவட்டத்தில் எழுதப்பட்டிருந்த “வேண்டாம் பிஜேபி; வேண்டும் ஜனநாயகம்” என்ற சுவர் விளம்பரத்தையும் ஆர்.எஸ்.எஸ் சங்கி கும்பலின் தூண்டுதலின் பெயரில் போலீஸ் துறையினர் கருப்பு மை கொண்டு அழித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக தமிழ்நாடு போலீஸ் துறை செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படும் போலிஸ் துறை, ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சங்கி கும்பலுக்கு நேரடியாக வேலை செய்து வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் கணபதிபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனரை எடுத்துச் சென்ற நாகப்பட்டினம் போலிஸ் துறையினரை திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மக்கள் அதிகாரம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.


மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.

6383461270

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க