2024 நாடாளுமன்ற தேர்தல்:
வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம்
தெருமுனைக் கூட்டம்

பத்திரிகை செய்தி

டிசம்பர்: 21 – பாட்டாளி வர்க்க ஆசான். தோழர் ஸ்டாலின் பிறந்தநாளில்,
“ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!
சுற்றி வளைக்குது பாசிசப்படை; வீழாது தமிழ்நாடு, துவளது போராடு!
2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டாம் பா.ஜ.க; வேண்டும் ஜனநாயகம்!”
என்ற தலைப்பில் தெருமுனை கூட்டம் பட்டாபிராம் (சென்னை) பகுதியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு வடக்கு மண்டல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பொருளாளர் தோழர். சக்திவேல் அவர்கள் தலைமை தாங்கினார்.

தனது உரையில் ”தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளான இன்று நமது நாடு எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது, குறிப்பாக சாதி, மத மோதல்களை உருவாக்கி, மக்களை பிளவுபடுத்தி அதன் மூலமாக தங்களுக்கு தேவையான சட்டங்களை நிறைவேற்றுவது என்பதை மோடி அரசு திட்டமிட்டு செய்து கொண்டு வருகிறது. அதனால் விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள்  மிகப்பெரிய  அளவில் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதை எதிர்க்க வேண்டும் என்றால் நாம் ஒன்றிணைந்து பாசிசத்திற்கு எதிராக போராடும்போது தான் இதை சரி செய்ய முடியும்” என்று கூறினார்.

அடுத்ததாக, மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணியை சார்ந்த தோழர். புவனசேகர் அவர்கள் உரையாற்றினார். இவர் தனது உரையில் ”மகத்தான பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் அவர்களின்  பிறந்தநாளை நாம் ஏன் உயர்த்திப் பிடிக்க வேண்டும்” என்பதையும்,  தோழர் ஸ்டாலின் அவர்களின் பாசிசத்திற்கு எதிரான செயல்பாடுகளை அரசியல் ரீதியாக விளக்கியும் பேசினார். மேலும் தேர்தல் பாதையில் மட்டுமே பாஜக கும்பலை வீழ்த்தி விட முடியாது. மக்கள் எழுச்சி மூலமாகத்தான் பாசிச சித்தத்தை வீழ்த்த முடியும் இதுதான் வரலாறு நமக்கு உணர்த்தும் செய்தி என்பதை  விளக்கிப் பேசினார்.

அடுத்து, தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர்  தோழர் .ஏழுமலை அவர்கள் உரையாற்றினார். இவர் ”ஆர். எஸ். எஸ் – பி.ஜே.பி கும்பல் நாடு முழுவதும் மத கலவரங்களை  நடத்திக் கொண்டு வருகிறது. ஆளுநர் அவர்கள் மாநில அரசுக்கு போட்டியாக இன்னொரு அரசை நடத்திக் கொண்டு வருகிறார். இது சர்வாதிகாரத்தின் உச்சகட்டம். இந்த சமூகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் நாம் முதலில் மோடி அரசை வீழ்த்த வேண்டும்” என்று அறைகூவல் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.

தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில  ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆ.கா. சிவா சிறப்புரையாற்றினார்.

தனது உரையில் தோழர் ஸ்டாலின் பிறந்த நாளான இன்று நாம் அவருடைய வழிகாட்டுதல்களை அவருடைய சிந்தனையை நாம் எப்படி வரித்துக் கொள்ள வேண்டும் என்றும் , ரஷ்யாவில் ஜார் மன்னரை வீழ்த்தி பல்வேறு திட்டங்கள் மூலமாக ரஷ்யாவை உலக நாடுகளில் முன்னேற செய்தது என்பதையும், இன்று இங்கு இருக்கக்கூடிய மோடி அரசு இந்தியாவை என்ன செய்து கொண்டிருக்கிறது, குறிப்பாக விவசாயிகளுடைய போராட்டமாக இருக்கட்டும், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டமாக இருக்கட்டும், தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட திருத்தங்களை செய்வதாக இருக்கட்டும் இப்படி மேலும் மேலும் இந்திய உழைக்கும் மக்களை படுகுழியில் தள்ளுவது, உழைக்கும் மக்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை நிறைவேற்றுவது, என்று இந்தியாவை பின்னுக்கு தள்ளக்கூடிய, நாட்டு மக்களை மேலும் அடிமையாக்க கூடிய பல்வேறு திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது என்பதையும்  இந்தியா ஜனநாயக நாடு என்று வாய்கிழிய பேசும் மோடி ஜனநாயகம் என்று சொல்லக்கூடிய நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்கட்சிகளையும் இடைநீக்கம் செய்துவிட்டு தங்களுக்கான சட்டங்களை திருத்துவது, மாற்றுவது என்பதை எந்த விதமான எதிர்ப்பும், கேள்விகளும் இல்லாமலே நிறைவேற்றிக் கொண்டிருப்பது இதைத்தான் மோடி அரசு ஜனநாயகம் என்று கூறுகிறது, என்பதை அம்பலப்படுத்தி பேசினார். நமக்கு எந்த மாதிரியான ஜனநாயகம் வேண்டும் என்பதை, தேர்ந்தெடுப்பதற்கும் திருப்பி அழைப்பதற்குமான ஜனநாயகமும், மக்களுக்கு தேவையற்ற திட்டங்களை கொண்டு வரும்பொழுது அதை நீக்குவதற்கு உண்டான ஜனநாயகமும், மக்களின் பிரச்சனைகளை தீர்க்காத எந்த திட்டமாக இருந்தாலும் அதை எதிர்க்கக் கூடிய ஜனநாயகமாகவும், உழைக்கும் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும் அப்படிப்பட்ட ஜனநாயகம் நமக்கு வேண்டும் என்றும், மேலும் வேண்டாம் பிஜேபி  வேண்டும் ஜனநாயகம் என்பதை பல்வேறு உதாரணங்களுடன் விளக்கியும், இறுதியாக பாசிசத்தை வீழ்த்த, பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு அமைப்பதே தீர்வு ஆகையால் அனைவரும் ஒன்றிணைவோம் என்று தனது உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக வடக்கு மண்டல பு.ஜ.தொ.மு செயற்குழு உறுப்பினர் தோழர். சரவணன் அவர்கள் உரையாற்றிய தோழர்களுக்கும், கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனநாயக சக்திகளுக்கும், கிளை/ இணைப்பு சங்க தோழர்களுக்கும் ஏனைய அனைவருக்கும் நன்றி தெரிவித்தவுடன் கூட்டம் நிறைவுற்றது.

தகவல்
வடக்கு மண்டல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

***

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பு, சங்கமான டி.ஐ மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக தோழர்  ஸ்டாலின் பிறந்த நாள் ஆலை வாயில் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு தங்கத்தின் தலைவர் தோழர் சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார். தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை ஏன் உயர்த்திப் பிடிக்க வேண்டும், இன்று நிலவக்கூடிய பாசிச அரசை வீழ்த்துவதற்கு தோழர் ஸ்டாலின் வழியில் செயல்பட்டு பாசிசத்தை வீழ்த்துவதற்கு உறுதி ஏற்க வேண்டும் என்று கூறி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

அவரைத் தொடர்ந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சக்திவேல் அவர்கள் சிறப்புரையாற்றினார் .

சிறப்புரையில் போலியான நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையை பயன்படுத்திக் கொண்டு பாசிச மோடி அரசு தன்னுடைய பாசிசத்தை அரங்கேற்றி வருகின்றது. அனைத்து அதிகார மட்டத்திலும் ஆர்.எஸ்.எஸ். சிந்தனை உள்ள அதிகாரிகளை அமரவைத்து மேலும் தன்னுடைய பாசிச சர்வாதிகாரத்தை நடத்துவதற்கு தீவிரமாக வேலை செய்து வருகிறது. வறுமை, பசி , பட்டினி, வேலை இல்லா திண்டாட்டம், பாசிச அடக்குமுறை சட்டங்கள் போன்ற கொடுமைகளில் மக்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். ஆகவே பாசிசத்த வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு அமைப்பதற்கு  தோழர் ஸ்டாலின் அவர்களின் சிந்தனை உயர்த்தி பிடிப்போம் வாருங்கள்  தோழர்களே! என்று அறைகூவல்  விடுத்து எனது உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக சங்கத்தின் பொருளாளர் தோழர். மகேஷ்குமார் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

கூட்டத்தில் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்பு குழு)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க