அ.தி.மு.க., நாம் தமிழர் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புள்ளதா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: அ.தி.மு.க. தற்போது பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டது. சீமான் பக்கம் இளைஞர்கள் திரள்வது கணிசமாக இருக்கிறது. இந்நிலையில் அ.தி.மு.க., நாம் தமிழர் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புள்ளதா? அல்லது அ.தி.மு.க. நிலைமை மோசமாகி பா.ஜ.க. வளர்வதற்கான வாய்ப்புள்ளதா?

.தி.மு.க-வை பொறுத்தவரை பா.ஜ.க-வுடன் இருந்தால், தனது வாழ்வு மொத்தமாக அழிந்துவிடும் என்ற காரணத்தால்தான் வெளியே வந்தது. ஆனால், அப்படி வெளியேறவில்லை என்றாலும் அ.தி.மு.க-வின் கப்பல் ஏற்கனவே கவிழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அ.தி.மு.க. தனது இரண்டாவது நிலையை தக்கவைத்துக் கொள்ளவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுதான் அ.தி.மு.க-வின் தற்போதைய நிலை.

அந்த இரண்டாம் இடத்தை பா.ஜ.க. பிடித்துவிடும் என்று சொல்லுமளவிற்கு தமிழ்நாட்டில் பா.ஜ.க. பெரிய சக்தியாக இல்லை. தான் இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடுவோம் என்று பா.ஜ.க. கருதிக்கொண்டிருக்கலாம். ஆனால், பார்ப்பனக் கட்சியான பா.ஜ.க. தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பது என்பது மிகவும் சிரமமான விஷயம்.

அ.தி.மு.க-விற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் கூட்டணி அமையுமா என்றால், அதில் நாம் சொல்வதற்கு எதுவும் இல்லை. சந்தர்ப்பவாத அரசியலில் எல்லாவிதமான கேடுகெட்ட சந்தர்ப்பவாதமும் அரங்கேறும். இதில் கவனிக்க வேண்டியவை, முதலில் நாம் தமிழர் கட்சி ஒரு கட்சியே கிடையாது; தனிநபரின் கீழ் சில விசுவாசிகள் இருக்கிறார்கள் அவ்வளவுதான். சீமானின் நாம் தமிழர் கட்சி என்பது நாய்குடைகள் போலதான். மக்களுக்கு மாற்று இல்லாததனால் இப்படியாக நாய்குடைகள் வளர்கிறதேயொழிய, இக்கட்சி சுயேட்சையாக இயங்கக்கூடியதல்ல. நீண்ட காலமான மரப்பட்டையில் அதிகமாக உற்பத்தியான புரோட்டீன்கள், திடீரென பெய்யும் மழையால் வெளிவருவதுதான் நாய்குடை. இதனை உயிரியல் வளர்ச்சியின் ஒரு பகுதியாக எடுத்து கொள்ள முடியாது. ஆக, சீமான் பக்கம் இளைஞர்கள் திரளுகிறார்கள் என்றால் சரியான மாற்று அரசியல் வைத்துள்ளவர்கள், இன்னும் வேகமாக வேலை செய்யவில்லை என்றுதான் புரிந்து கொள்ளவேண்டும்.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க