காசா: குழந்தைகளை நரவேட்டையாடும் இரத்தவெறி பிடித்த இஸ்ரேல் | காணொளிகள்

க்டோபர் 7 தொடங்கிய பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை 100 நாட்களைக் கடந்தும் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. தற்போது வரை 24,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் துணையுடன் இஸ்ரேல் தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

காசாவில் கொல்லப்பட்டவர்களில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது இரத்தத்தை உறைய வைக்கும் வகையில் காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

காசாவில் நிலவும் கடும் மருந்துத் தட்டுப்பாடு குறித்து யுனிசெப் (UNICEF) கடந்த டிசம்பர் 19 அன்று செய்தி வெளியிட்டது. அதில், காசாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கை கால்களை அகற்றும் அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு கடுமையான மருந்து தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் கூறியுள்ளது.

இதன் காரணமாக காசா மருத்துவர்கள் மயக்க மருந்து இல்லாமல் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மயக்க மருந்து கொடுக்காமல் தனது மகனுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர். வலி தாங்க முடியாமல் அவரது மகன் இறந்து போனான்.

மயக்க மருந்து இல்லாமல் தனது 16 வயது மகளின் பாதத்தை அகற்றிய மருத்துவர்

இஸ்ரேலின் தாக்குதலால் தொடர்ந்து கொல்லப்படும் குழந்தைகள்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க